விஸ்வரூபம் பிரச்னையால் கமலுக்கு பத்மபூஷன் மறுப்பு…?
Page 1 of 1

மத்திய அரசு வெளியிட்ட பத்ம விருதுகளின் பெயர் பட்டியலில் நடிகர் கமல்ஹாசனின் பெயரும் இருந்ததாகவும், ஆனால் விஸ்வரூபம் பிரச்னையால் கடைசி நேரத்தில் அவர் பெயர் நீக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் நடித்து, இயக்கி, அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் விஸ்வரூபம். இப்படம் நேற்று 25ம் தேதி தமிழகம் உள்ளி்ட்ட இந்தியாவின் பிற மாநிலங்களில் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் படம் வெளியாவதற்கு முதல்நாள் விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் போல் சித்தரிப்பதாகவும், இப்படத்தில் பலகாட்சிகள் முஸ்லிம்களை தறவாக சித்தரிப்பதாகவும் கூறி முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள் திடீர் போர்க்கொடி தூக்கினர். இதனால் இப்படத்தை 2 வார காலத்திற்கு தடை செய்வதாக தமிழக அரசு தெரிவித்தது. இதனால் தமிழகத்தில் நேற்று இப்படம் வெளியாகவில்லை. இதேப்போல் புதுச்சேரியிலும் இப்படம் ரிலீஸ் ஆகவில்லை.
இந்நிலையில் மத்திய அரசு நேற்று வெளியிட்ட பத்மவிருதுகள் பட்டியலில் நடிகர் கமல்ஹாசனின் பெயரும் இடம்பெற்று இருந்ததாம். அவரது பெயர் பத்மபூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்ததாம். ஆனால் கடைசிநேரத்தில் அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதுப்பற்றி விசாரித்ததில் விஸ்வரூபம் படத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் தமிழகத்தில் படமும் ரிலீசாகவில்லை. இந்தசூழலில் அவருக்கு விருது வழங்கினால் அது சரியாக இருக்காது என்று கருதி அவரது பெயரை கடைசி நேரத்தில் நீக்கவிட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக பத்மபூஷன் விருதுக்கு நடிகர் கமல்ஹாசன் பெயரை பரிந்துரை செய்துள்ளது தமிழக அரசு, ஆனால் கடைசி நேரத்தில் விஸ்வரூப பிரச்னையால் அவரது பெயரை நிராகரித்துவிட்டது மத்திய அரசு.
ஏற்கனவே கமல் சிறந்த நடிகருக்காக 3முறை தேசியவிருதும், பத்மஸ்ரீ விருது வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஸ்வரூபம் திரைப்பட பிரச்னையால் கமலை விட்டு நழுவிய பத்ம விருது
» விஸ்வரூபம்: கமலுக்கு ரஜினி ஆதரவு
» விஸ்வரூபம் - கமலுக்கு ஆதரவாக திரையரங்குகள்
» விஸ்வரூபம் படத்தால் கமலுக்கு ஏற்பட்டு இருக்கும் இக்கட்டான நிலையை பார்த்து போனில் கமலை தொடர்பு கொண்ட ரஜினி, அவரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். கமலின் விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது, அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டை நாடினார்
» விஸ்வரூபம் படம் இழுத்தடிப்பால் கமலுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum