அரியலூரில் மனுநீதிநாள் முகாமில் உதவிகள் கேட்டு 502 மனுக்கள்
Page 1 of 1
அரியலூரில் மனுநீதிநாள் முகாமில் உதவிகள் கேட்டு 502 மனுக்கள்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைத்தீர்க்கும் மன்றத்தில், மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா வேண்டி மனுக்களும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை வேண்டி மனுக்களும், முதியோர் உதவித்தொகை வேண்டி மனுக்களும், புதிய குடும்ப அட்டை வேண்டி மனுக்களும், காவல்துறையின் சார்பில் நடவடிக்கை எடுக்க கோரி மனுக்களும், வேலைவாய்ப்பு வேண்டி மனுக்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் நலத்திட்ட உதவிகள் வேண்டி மனுக்களும் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வேண்டி மொத்தம் 502 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
மேலும, முதலமைச்சர் தனிப்பிரிவு வரப்படும் மனுக்கள் உடனடியாக எந்தவித தாமதமின்றி மனுக்கள் பரிசீலனை செய்து பதில் அளிக்க வேண்டும். அந்தந்த துறைகளின் சார்பில் வழங்கும் மனுக்கள் மீது உடனடியாக பதில் அளிக்க துறை அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
தகுதியான பதில் அளித்து பொதுமக்கள் மனுவிற்கு மதிப்பளிக்க வேண்டும். இங்கு வழங்கப்படும் மனுக்கள் திரும்ப, திரும்ப வராத அளவிற்கு பதில்கள் அளித்து தள்ளுபடி செய்த மனுக்கள் ஆரம்பத்திலேயே ஏற்காமல் இருக்க செய்ய வேண்டும்மென்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பில் தனது ஒரு மகன் மற்றும் இரண்டு மகன்களை இராணுவப்பணிக்கு அனுப்பியதற்கான 04 பெற்றோர்களுக்கு தமிழக அரசின் ஊக்க மானியம் ரூ.3,750க்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் ரவிகுமார் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கருப்பசாமி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஜீனத் பானு, முன்னாள் படைவீரர் நல அமைப்பாளர் சேதுமாத வராமன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இப்போது என் வயது 25. எனக்கு ஒரு அக்கா. எங்கள் தந்தை எங்களுடன் இல்லை. தாயார் சத்துணவு ஊழியை. மிகமிகக் குறைந்த வருமானத்துடன் பலரிடம் உதவிகள் கேட்டு அக்காவின் திருமணத்தை நான் முடித்து வைத்தேன். 12வது வரை படித்து ஒரு கடையில் சாதாரண வேலை செய்துவரும் எனக்கு, எ
» அமெரிக்காவின் சித்திரவதை முகாமில் உண்ணாவிரதம்!
» வீரப்பன் கூட்டாளிகளின் கருணை மனுக்கள் நிராகரிப்பு
» கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதைக் கேட்டு பிஸ்டோரியஸ் அழுதார்
» தலைமைச் செயலகத்தை மாற்றுவதை தடை செய்யக் கோரும் மனுக்கள் தள்ளுபடி
» அமெரிக்காவின் சித்திரவதை முகாமில் உண்ணாவிரதம்!
» வீரப்பன் கூட்டாளிகளின் கருணை மனுக்கள் நிராகரிப்பு
» கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதைக் கேட்டு பிஸ்டோரியஸ் அழுதார்
» தலைமைச் செயலகத்தை மாற்றுவதை தடை செய்யக் கோரும் மனுக்கள் தள்ளுபடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum