தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆதிபகவன் படத்தில் யாரையும் புண்படுத்தவில்லை: தயாரிப்பாளர் அன்பழகன் மறுப்பு

Go down

ஆதிபகவன் படத்தில் யாரையும் புண்படுத்தவில்லை: தயாரிப்பாளர் அன்பழகன் மறுப்பு Empty ஆதிபகவன் படத்தில் யாரையும் புண்படுத்தவில்லை: தயாரிப்பாளர் அன்பழகன் மறுப்பு

Post  ishwarya Thu Mar 28, 2013 1:27 pm

ஜெயம் ரவி, நீது சந்திரா ஜோடியாக நடித்துள்ள படம் ‘ஆதிபகவன்‘. இப்படத்தை அமீர் இயக்கியுள்ளார். ஜெ.அன்பழகன் தயாரித்துள்ளார். அடுத்த மாதம் (பிப்ரவரி) ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில் ‘ஆதிபகவன்’ படத்தில் இந்துக்களை அவமதிக்கும் சீன்கள் இருக்கும் என சந்தேகிப்பதாகவும் எனவே படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பும் முன் இந்து அரசியல் கட்சிகள் மற்றும் இந்து அமைப்பினருக்கு திரையிட்டு காட்ட வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனரிடம் வக்கீல்கள் புகார் அளித்துள்ளனர்.

இதற்கு பதில் அளித்து தயாரிப்பாளர் ஜெ.அன்பழகன் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

‘ஆதிபகவன்’ படத்தில் மதம் சம்பந்தமான காட்சிகள் எதுவும் இல்லை. யாரையும் புண்படுத்தும் சீன்களும் இடம் பெறவில்லை. ‘ஆதிபகவன்’ என்பது இரு கேரக்டர்கள் பெயர். திருக்குறளில் இடம் பெற்ற ‘ஆதிபகவன்’ வார்த்தையையே படத்துக்கு தலைப்பாக்கி இருக்கிறோம். கமர்சியலான காதல் படமாக தயாராகியுள்ளது.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக படம் இருக்கும். இப்படத்தை முடக்க பார்க்கிறார்கள். காரணமே இல்லாமல் எதிர்க்கின்றனர். சுயநலத்துக்காகவும், விளம்பரத்துக்காகவும் எதிர்ப்பு கிளப்புகின்றனர். இவர்களுக்கு பிடித்த படமாகவே ‘ஆதிபகவன்’ உருவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆதிபகவன் படத்தில் யாரையும் புண்படுத்தவில்லை: தயாரிப்பாளர் அன்பழகன் மறுப்பு
» ‘ஆதிபகவன்’ படத்தில் நடித்ததைவிட டப்பிங் பேசியது ஜாலியாக இருந்தது: ஜெயம் ரவி
» 'ஆதிபகவன்' படத்தில் இந்துக்கள் பற்றி அவதூறு: தலைப்பை மாற்ற வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் வக்கீல்கள் புகார்
» ஷாருக்கான் படத்தில் குத்துப்பாட்டுக்கு ஆட நயன்தாரா மறுப்பு
» என்னுடைய படத்தில் வடிவேலா?: சுந்தர்.சி மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum