தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும்: கமல் ஹாசன் உருக்கமான வேண்டுகோள்

Go down

ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும்: கமல் ஹாசன் உருக்கமான வேண்டுகோள் Empty ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும்: கமல் ஹாசன் உருக்கமான வேண்டுகோள்

Post  ishwarya Thu Mar 28, 2013 1:23 pm

விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்ட தொடர் இடையூறுகள் மற்றும் தடையினால் கடும் அதிர்ச்சியடைந்துள்ள கமல் ஹாசன் இன்று பத்திரிகையாளர்களுக்கு தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார். அப்போது தனக்கு ஏற்பட்ட இழப்பைப் பற்றி கவலைப்படவில்லை என்று கூறிய அவர், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்.

விஸ்வரூபம் வழக்கு திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது தமிழக அரசு கொடுக்கும் விளக்கத்தைப் பொறுத்து விஸ்வரூபம் படத்திற்கான சிக்கல் தீருமா? என்பது தெரியவரும்.

இதற்கிடையே படத்தை வெளியிடலாம் என்று நேற்று ஐகோர்ட் அனுமதி அளித்ததால், இன்று நீண்ட நேரம் தியேட்டரில் காத்திருந்த ரசிகர்கள் படத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். ஒருசில இடங்களில் ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ரசிகர்களை அமைதியாக இருக்கும்படி கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

விஸ்வரூபம் படத்துக்கு எழுந்துள்ள சிக்கலால் எனக்கு கோபம் எதுவும் இல்லை. வருத்தம்தான். நான் நியாயத்துக்காக போராடி வருகிறேன். முஸ்லிம்கள் உள்பட எனது ரசிகர்கள் அனைவரும் என்னுடனேயே உள்ளனர். முஸ்லிம் ரசிகர்கள் மற்றும் இதர முஸ்லிம் நண்பர்கள் என்னுடன் தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்களும் நானும் சில உடன்படிக்கைகளை எடுக்க இருக்கிறோம்.

அதற்குள் ரசிகர்களாகிய நீங்கள் ஆவேசத்திற்கு விலை போகாதீர்கள். வேறு சக்திகளுக்கு விலை போகாதீர்கள். கலவரத்தில் ஈடுபடாதீர்கள். திங்கள்கிழமை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. அதுவரை பொறுமை காத்திருங்கள்.

உங்களுக்கு என் மீது பாசம் அதிகம் என்பதை நான் அறிவேன். உங்கள் பாசம் எனக்குப் புரிகிறது. எனது ரசிகர்கள் என்று சொல்லும்போது எத்தனையோ முஸ்லிம் சகோதரர்களும் அதில் உள்ளனர்.

மிகப்பெரிய போராட்டம் நடத்தும் அளவுக்கு இது ஒன்றும் தேசிய பிரச்சினை அல்ல. வெறும் சினிமா. நான் ஒரு சாதாரண கலைஞன், அவ்வளவுதான். எனவே, ரசிகர்களாகிய நீங்கள் வதந்திகளை பொய்யாக்குங்கள். கோபத்திற்கு ஆளாகாதீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும்: கமல் ஹாசன் உருக்கமான வேண்டுகோள்
» ‘ரஜினி உங்களைச் சந்திப்பார்… ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும்!’ – லதா ரஜினி
» திரையுலகமே ஏன் இந்த அமைதி?… கமல் ரசிகர்கள் ஆவேசம்!
» பழைய படங்களை பாதுகாக்க வேண்டும் : கமல் வேண்டுகோள்!!
» கமல் மகளாக இருந்தாலும் சினிமாவில் நிலைக்க திறமை வேண்டும் -ஸ்ருதி ஹாசன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum