தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கேள்விக்கென்ன பதில்!

Go down

கேள்விக்கென்ன பதில்!  Empty கேள்விக்கென்ன பதில்!

Post  meenu Thu Mar 28, 2013 1:13 pm

தந்தி டிவியில் வாரந்தோறும் ஞாயிறு இரவு 8.10 மணிக்கு ஒளிபரப்பாகும் பரபரப்பான நேர்காணல் நிகழ்ச்சி, கேள்விக்கென்ன பதில். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சியும் கூட. இதில் அந்த வார அரசியல் மற்றும் சமூக தளத்தில் நிகழும் சம்பவங்கள், பிரச்சினைகள் அல்லது சர்ச்சைகளையட்டி சம்பந்தப்பட்ட பிரமுகரை தந்தி ஸ்டூடியோவிற்கு அழைத்தோ, அல்லது அவரிடத்திற்கு சென்றோ பேட்டி காண்பது. நேர்காணலுக்கு வந்திருக்கும் பிரமுகர்களிடம் அவசியமற்ற கேள்விகளால் கிடுக்கிப்பிடி போடுவதிலேயே திருப்தியடைந்து விடாமல், ஒவ்வொரு பிரச்சினை குறித்தும் பொதுமக்கள் மத்தியில் தோன்றும் நியாயமான கேள்விகளை, சந்தேகங்களை, கோபங்களை துளி கூட தயங்காமல் நடுநிலையுடன் கேட்டு பதில் பெறுவதே இதன் சிறப்பம்சம். திகார் சிறையிலிருந்து ஒன்றரையாண்டு சிறைவாசத்திற்குப்பின் வெளியே வந்த முன்னாள் மத்திய மந்திரி ராசா முதன் முறையாக கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் வாய் திறந்தார். அதேபோல் நித்யானந்தா விவகாரம் பெரும் சர்ச்சைக்கிடமானபோது, அவரது ஆசிரமத்திலேயே அவரை சந்தித்தது; அதேபோல் நித்யானந்தாவோடு சம்பந்தப்பட்ட ஆர்த்திராவ், இவர்களைத் தவிர டாக்டர் ராமதாஸ், வைகோ, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தா.பாண்டியன், துரைமுருகன், குஷ்பு, டி.ஆர்.உள்பட பலர் கேள்விக்கென்ன பதில் நேர்காணலில் இடம் பெற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் நேர்காணல் நடத்தும் ரங்கராஜ் பாண்டே, கேள்விகளை அசாத்திய துணிச்சலுடன் தொடுக்கும் விதம் குறிப்பிடத்தக்கது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum