ஆடல் அரசி ஆடல் அரசி
Page 1 of 1
ஆடல் அரசி ஆடல் அரசி
மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 9.02 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய நிகழ்ச்சி, ஆடல் அரசி. பரதத்தை மையமாக வைத்து இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டிருக்கிறது. பக்தியை மையப்படுத்திய நடனம், தமிழ், இலக்கியங்களை பிரதிபலிக்கும் நாட்டியம், புகழ் பெற்ற தமிழ்க் கவிஞர்களின் பாடல்கள் நாட்டிய வடிவில் அரங்கேற்றம் என மூன்று பகுதிகள் பரதநாட்டியத்தின் வழியே அரங்கேறுகிறது. மக்கள் இசை: பண்டைய காலங்களில் மக்களால் பல்வேறு காலகட்டங்களில் பாடப்பட்ட பாடல்கள் இன்று சூழ்நிலை மாற்றத்தின் காரணமாக மறைந்து வருகின்றன. இதுபோன்ற பாடல் தொகுப்புகளை ஊக்குவிக்கும் வகையில் மக்கள் தொலைக்காட்சியில் சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.02 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியே மக்கள் இசை. நிகழ்ச்சியில் இடம் பெறும் தமிழிசைப் பாடல்களை சித்தன் ஜெயமூர்த்தி, செந்தில் ஆகியோர் பாடுகிறார்கள். இயற்கை, ஏழ்மை, தமிழ்மொழி இவற்றை மையமாகக் கொண்டே பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum