அலெக்ஸ் பாண்டியன்
Page 1 of 1
அலெக்ஸ் பாண்டியன்
நடிகர்கள்:
கார்த்தி–அனுஷ்கா.
இசை:
தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு:
சரவணன்
இயக்கம்:
சுராஜ்.
தயாரிப்பு:
கே.ஈ.ஞானவேல்ராஜா.
கதையின் கரு: முதல்வரின் மகளை கடத்தும் இளைஞன்.
மிலிந்த் சோமன், அமெரிக்காவில் மருந்து கம்பெனி நடத்தும் தொழில் அதிபர். இவருடைய கம்பெனி தயாரித்த ஒரு மோசமான மருந்தை தமிழ்நாட்டில் விற்பனை செய்ய விரும்புகிறார். இதற்கு அவருடைய நண்பர் சுமனும், சாமியார் மகாதேவனும் உதவுகிறார்கள். மூன்று பேரும் முதல்வர் விசுவை சந்தித்து, அந்த மருந்தை தமிழ்நாட்டில் விற்பனை செய்வதற்கு அனுமதி கேட்கிறார்கள். அது, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் மருந்து என்பதை கண்டுபிடித்து, அதற்கு அனுமதி கொடுக்க மறுத்து விடுகிறார், விசு.
அவரை மிரட்டி பணிய வைப்பதற்காக, மகள் அனுஷ்காவை கடத்த திட்டமிடுகிறார்கள். கடத்தல் ஆசாமி, கார்த்தி. அனுஷ்காவை கடத்திப்போய், காட்டுக்குள் சிறை வைக்கிறார். மிலிந்த் சோமன் கும்பல் எதற்காக அனுஷ்காவை கடத்த சொன்னார்கள்? என்ற உண்மை தெரியவரும்போது, கார்த்தி மனம் மாறுகிறார். அனுஷ்காவை அவருடைய தந்தையிடமே ஒப்படைக்க முயற்சிக்கிறார். வில்லன் கும்பல் விடுமா? கார்த்தியை அடித்து துவைத்து காயப்போடுகிறார்கள். எல்லா கதாநாயகர்களுக்கும் ‘கிளைமாக்ஸ்’சில் வருமே, அதுபோன்ற யானை பலம் கார்த்திக்கும் வருகிறது. அப்புறம் என்ன? வில்லன் கும்பலை துவம்சம் செய்து, அனுஷ்காவை அணைத்துக் கொள்கிறார்.
கொஞ்சம் நகைச்சுவை, நிறைய அடிதடி நடத்தி, கதாநாயகனுக்கே உரிய வேலைகளை கச்சிதமாக செய்து இருக்கிறார், கார்த்தி. இடைவேளை வரை அவர், சந்தானத்தின் மூன்று தங்கைகளுடன் கொஞ்சியும், குலவியும் ‘காமெடி’ பண்ணுகிறார். சந்தானத்தை கலாய்க்கிறார். படம் முழுக்க அவரையும், அனுஷ்காவையும் விரட்டிக்கொண்டு கொத்து கொத்தாக வரும் வில்லனின் அடியாட்களை, ஒரே அடியில் சாய்க்கிறார். சண்டை காட்சிகளில், நிறைய ‘ரிஸ்க்’ எடுத்து இருக்கிறார்.
அழகான அனுஷ்கா, கொஞ்சம் அகலம் கூடியிருக்கிறார். அதனால்தானோ என்னவோ அவருக்கு அதிக வேலை இல்லை. கடத்தப்பட்ட முதல்வரின் மகளாக பதற்றம் காட்டுவதுடன் சரி. கார்த்தியுடன் ஒரே ஒரு ஆட்டம், அட்டகாசமாக ஆடுகிறார்.
கார்த்தியை வீட்டை விட்டு விரட்ட சந்தானம் புதுசு புதுசாக ‘ஐடியா’க்கள் போடுவதும், அது அவருக்கே வினையாக வந்து விடிவதுமான நகைச்சுவை, வடிவேல் பிராண்ட். கார்த்தி, சந்தானம், அவருடைய மூன்று தங்கைகள் வரும் காட்சிகள், தியேட்டரை கலகலப்பாக வைத்திருக்கின்றன. மனோபாலா, வேட்டைக்காரராக வந்து சிரிக்க வைக்கிறார். அவர் தப்பிக்க முயன்று, கார்த்தியிடம் அநியாயமாக அடிவாங்குகிற சீன்கள், ரகளை. எப்போதும் அடியாட்கள் கூட்டத்துடன் வரும் வில்லன்களாக மிலிந்த் சோமன், சுமன், மகாதேவன்.
தேவிஸ்ரீபிரசாத் இசையில் ஒரே ஒரு பாடல், சூப்பர் குத்து. எஸ்.சரவணன் ஒளிப்பதிவில் ரெயில் சண்டையும், கார் துரத்தல்களும், மிரட்டுகின்றன.
தண்டவாளத்துக்கு மத்தியில் அனுஷ்கா தலைதெறிக்க ஓடுவது போலவும், அவரை தடி தடியாய் ரவுடி கும்பல் துரத்துவது போலவும், அவர்களை அடித்து விரட்டியபடி கார்த்தி ஓடி வருவது போலவும், பரபரப்பாக தொடங்குகிறது, படம்.
இடைவேளை வரை கார்த்தியும், அனுஷ்காவும் யார்? என்ற ரகசியத்தை டைரக்டர் சுராஜ் காப்பாற்றியிருக்கிறார். அதுவரை கலகல. விறுவிறு. அப்புறம் பார்த்து பழகிய அதிரடி காட்சிகள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அலெக்ஸ் பாண்டியன்
» சாலக்குடியில் அலெக்ஸ் பாண்டியன்
» சாலக்குடியில் அலெக்ஸ் பாண்டியன்
» கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன்
» 12-12-12 அலெக்ஸ் பாண்டியன் ஆடியோ
» சாலக்குடியில் அலெக்ஸ் பாண்டியன்
» சாலக்குடியில் அலெக்ஸ் பாண்டியன்
» கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன்
» 12-12-12 அலெக்ஸ் பாண்டியன் ஆடியோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum