தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சங்கர நாராயணர் கோவில்

Go down

சங்கர நாராயணர் கோவில் Empty சங்கர நாராயணர் கோவில்

Post  birundha Thu Mar 28, 2013 12:38 am


வட சங்கரன் கோவில் என்று பக்தர்களால் அழைக்கப்டும் சென்னை சாலிக்கிராமம் தேவராஜ் நகர் ராமர் தெருவில் உள்ள சங்கர நாராயணர் திருக்கோவிலிலும் இதே போன்று திருமேனியை கண்டு வணங்கலாம். நான்னரை அடி உயரத்தில் சிவனும, விஷ்ணுவும் இணைந்து நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றனர்.

ஒரே சன்னதியில் சங்கர- நாராயணரும் சங்கர - லிங்கேஸ்வரரும் அருள்பாலிக்கும் அற்புதக்காட்சி வேறு எங்கும் காண கிடைக்காது. தனிச்சன்னதியில் கோமதி அம்மன் எழுந்தருளி இருக்கிறார். இவர்களை வணங்கினால் குபேர பாக்கியம் பெற்று செல்வச் செழிப்புடன் வாழ்வார்கள் என்பது கோவிலின் புராணம்.

விநாயகர், வள்ளி-தெய்வானை, சமேத முருகர், லட்சுமி நரசிம்மர், துர்கா தேவி, தர்மசாஸ்தா, தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், கால பைரவர் உள்ளிட்ட பல்வேறு பரிகார தெய்வங்களும் பக்தர்களுக்கு வரம் அருள்கின்றனர். இக்கோவிலில் உள்ள நந்தி ரிஷப குஞ்சரம் எனும் பெயரோடு விளங்குகிறது.

ஒருபுறம் இருந்து பார்த்தால் காளையாகவும், மறுபுறம் இருந்து பார்த்தால் யானையாகவும் காட்சி அளிப்பது விசேஷம், தேவியர்களுடன் வீற்றிருக்கும் கல்யாண நவக்கிரகத்தை 11 வாரங்கள் வலம் வந்து வழிபடும் இளம் வயதினருக்கு விரைவில் திருமணப் பாக்கியம் கைகூடும் என்கின்றனர். ஏழு நிலைகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது ராஜகோபுரம்.

அன்னை பார்வதிக்கு சங்கர- நாராயணர் காட்சி கொடுத்த தினமே ’ஆடித்தபசு’ என போற்றி வணங்கப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்தபசு திருவிழா களைக்கட்டும். சிவன் மற்றும் நாராயணனுக்கு உகந்த அத்தனை விசேஷ தினங்களிலும் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

ஆடிப்பூரம், நவராத்திரி, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, மகா சிவராத்திரி உள்ளிட்ட நாட்களிலும் விசேஷ பூஜைகள் உண்டு. சித்ரா பவுர்ணமி அன்று கோமதி அம்மன் மலர்ப்பாவாடை தரிசனம் நடைபெறும். இக்காட்சியை காணும் கன்னிப்பெண்களுக்கு திருமணப்பாக்கியம் கைக்கூடும்.

நடை திறந்திருக்கும் நேரம்....

காலை 6 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரையும் கோவிலின் நடை திறந்திருக்கும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum