குச்சனூர் சனீஸ்வரர் கோவில்
Page 1 of 1
குச்சனூர் சனீஸ்வரர் கோவில்
ஸ்தல வரலாறு...
நவக்கிரகங்களில் மிகவும் சக்திவாய்ந்த சனி பகவானுக்கு இந்தியாவிலேயே 2 கோவில்கள் தான் உள்ளது. ஒன்று திருநள்ளாறு, மற்றொன்று தேனி மாவட்டம் குச்சனூர். குச்சனூரில் உள்ள சனி பகவான் சுயம்புவாக தோன்றியவர். இவரை வழிபட்டால் உடனடியாக குறைகள் தீரும் என்பது இன்றளவும் உண்மையாக உள்ளது.
முன்னொரு காலத்தில் தினகரன் என்ற மன்னன் மகன் சந்திரவதனனை பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டான். இதனால் நாட்டை விட்டு காடு சென்றான். அங்கு இறைவனை வருந்தி வேண்டினான். அப்போது வானத்தில் ஒரு அசரீரி ஒலித்தது. செண்பகமரம், சந்தன மரம், கொங்குமரம் சூழ்ந்த ஒரு இடத்திற்கு செல், அங்கு சனி பகவான் சுயம்புவாக தோன்றுவார், அவரை தரிசித்து பிரம்மஹத்தி தோசத்தை போக்கி கொள் என்றது.
அதன்படி சென்ற மன்னன் சந்திரவதனனுக்கு அடர்ந்த காட்டில் உள்ள சுரபி நதி கரையில் அமைந்துள்ள இடத்தில் சனிபகவான் சுயம்புலிங்கமாக தோன்றி அருள்பாலித்தார். மன்னன் அங்கேயே தங்கி சுயம்பு லிங்கத்திற்கு தென்னை மரத்தில் உள்ள கம்புகளால் குச்சுகள் அமைத்து வழிபட்டான். பகவானை வணங்கிய மன்னனுக்கு அங்கேயே பிரம்மஹத்தி தோஷம் அகன்றது.
இதனால் கோவில் புகழ் அடைந்தது. பக்தர்கள் வருகை அதிகரிக்க தொடங்கியது. ஒவ்வொரு ஆடி மாதம் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். இதில் 3-வது சனிக்கிழமை பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும். ஆடி மாத சனிக்கிழமைகள் தவிர சனி பெயர்ச்சி அன்றும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.
தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் ஆண், பெண் பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் வந்து பரிகார பூஜைகள் செய்து கொள்வார்கள். காக்கை வாகனத்தை நேர்த்தி கடனாக செலுத்துவார்கள், சனிபகவான் கோவிலில் எள்பொங்கல் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
சுயம்வபுவாக இருக்கும் இந்த சனீஸ்வர பகவான் கோவிலில் விடந்தை மரம் தல மரமாகவும், கருங்குவளை மலர் தல மலராகவும், வன்னி இலை தல இலையாகவும் உள்ளது. சனீஸ்வர பகவானுக்கு காகம் வாகனமாகவும், எள் தானியமாகவும் இருக்கிறது.
இதனால் இங்கு வரும் பக்தர்கள் எள் விளக்கு போட்டு வணங்குவதுடன் காகத்திற்கு அன்னமிட்டு வழிபடுகின்றனர். தேனி நகரில் இருந்து சின்னமனூர் வழியாக குச்சனூரை அடையலாம். தேனியிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரமாகும்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» யந்திர சனீஸ்வரர் கோவில்
» குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில்
» குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில்
» திருநள்ளாறு சனீஸ்வரர்
» சனீஸ்வரர் வழிபாடு
» குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில்
» குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில்
» திருநள்ளாறு சனீஸ்வரர்
» சனீஸ்வரர் வழிபாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum