வெயிலுகந்த விநாயகர் திருக்கோயில் - உப்பூர்
Page 1 of 1

ஸ்தல வரலாறு...
புராண பெயர்: – சூரியபுரி, தவசித்திபுரி, பாவ விமோசனபுரம், வன்னிமந்தார வனம்
ஊர்: – உப்பூர்
மாவட்டம்: – ராமநாதபுரம்
மாநிலம்: – தமிழ்நாடு
இந்த திருக்கோயில் தோற்றம் பற்றி பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. தட்சன் தனது மகளான தாட்சாயிணியை மணந்த சிவபெருமான், தன்னைப் பணிய வேண்டும் என விரும்பினான். தன்னை வணங்காத ஈசனை அவமானப்படுத்த ஒரு மாபெரும் வேள்வியை உருவாக்கினான்.
சிவபெருமான் தவிர ஏனைய வானவர்களும், தவசிகளும் தட்சனின் அழைப்பைப் பெற்று அதில் பங்கேற்றனர். இதனால் ஆத்திரமுற்ற பார்வதி தனது தந்தைக்கு புத்திபுகட்ட வந்தபோது அவமானப்படுத்தப்பட்டாள். அதனால் வெகுண்ட சக்தி, தந்தையின் யாகத்தை அழிக்குமாறு வீரபத்திரரை அனுப்பினார்.
யாகத்தில் கலந்து கொண்டு செய்த குற்றத்திற்காகத் தண்டனையும் பெற்ற சூரியன் பரிகாரம் தேட முற்பட்டார். பாண்டி நாட்டில் கீழக்கடற்கரை ஓரமாக தேவிபுரம், காளிபுரம், திருப்புணவாயில் ஆகிய தலங்களுக்கு அருகே அமைந்துள்ள வன்னிமந்தாரவனம் என்ற பகுதியில் உள்ள விநாயகரை துதித்து தவத்தில் ஈடுபட்டார்.
ஆதவனின் தவத்தால் மகிழ்வுற்ற விநாயகர் உடன் காட்சியளித்து அவரது பாவங்கள் விலகுமாறு அருளினார். தனக்கு அருள்புரிந்ததுபோல் பக்தர்களுக்கும் அருள் வழங்குமாறு வெய்யோன் வேண்டினார். மேலும் திருமேனி மீது தனது ஒளிக்கதிர்கள் முழுமையாக விழுந்து வணங்க வழிகாட்டுமாறு சூரியன் வரம் பெற்றார்.
சூரியன் கதிர்கள் தன் மீது முழுமையாக வீசுமாறு கோயில் கொண்டதால் இப்பெருமானுக்கு வெயிலுகந்த விநாயகர் என்ற பெயர் நிலைத்தது. 1905ம் ஆண்டு இக்கோயில் கட்டியதாக கூறப்படுகிறது. மரத்தடியில் இருந்த இறைவன் ஓர் அர்ச்சகர் வடிவில் கனவில் வந்து எனக்கு எல்லா கோயில்களிலும் உள்ளது போல் கர்ப்பகிரகத்தில் அதாவது அர்த்த மண்டபத்தை மூடவிடாமல் எப்பொழுதும் என் மேல் வெயில்படும்படி கோயில் அமைத்தல் வேண்டும் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணத்தால் இத்திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள விநாயகர் பெருமான் மீது தட்சிணாயன காலங்களில் தெற்கு பகுதியில் சூரியவெளிச்சம் படுகிறது.
கோவில் நடை திறக்கும் நேரம்...
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» செல்வ விநாயகர் திருக்கோயில்
» அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில்
» சித்தி விநாயகர் திருக்கோயில், பாகலூர்
» மணக்குள விநாயகர் திருக்கோயில் - புதுச்சேரி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum