தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அனந்தமங்கலம் சமணர் குன்று

Go down

அனந்தமங்கலம் சமணர் குன்று Empty அனந்தமங்கலம் சமணர் குன்று

Post  birundha Wed Mar 27, 2013 10:29 pm

கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் குன்று காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் உள்ள அனந்தமங்கலம் என்ற ஊரின் எல்லையில் அமைந்துள்ளது. இது முதலாம் பராந்தகனின் ஆட்சிக்காலத்தில் (கி.பி. 945) வர்த்தமான பெரியடிகள் என்பவர் ஜினகிரியில் உள்ள ஒரு சமணத் துறவியின் உணவுக்காக ஐந்து கழஞ்சுப்பொன் அளித்த செய்தியை இக்குன்றில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.

பழங்காலத்தில் ஜினகிரி என்றழைக்கப்பட்ட இக்குன்று தற்போது சமணர் குன்று என்று அழைக்கப்படுகிறது. இக்குன்றின் உச்சியில் ரெட்ட நேமி அடிகள், அட்டராந நேமிகள் என்ற இரண்டு தீர்த்தங்கரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவ்வூரில் சமணப்பள்ளி இருந்ததும் இக்கல்வெட்டின் மூலம் தெரியமுடிகிறது.

இக்குன்றின் முன்புறம் முதலாம் குலோத்துங்கச் சோழனால் எழுப்பப்பட்ட பழைமையான சிவாலயம் ஒன்று மற்றொரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. அனந்தமங்கலம் செல்ல விரும்புவோர் திண்டிவனம் வந்து, திண்டிவனம் ஒரத்தி வழித்தட பேருந்தில் ஏறி அனந்தமங்கலம் சிவன் கோவில் நிறுத்தத்தில் இறங்க வேண்டும். சிவன் கோவிலின் பின்புறத்தில் காணப்படும் சிறிய குன்றே சமணக்குன்றாகும்.

அனந்தமங்கலம் போலவே அடுத்துள்ள ஒரத்தியிலும் வீரன் ஒருவன் தன் வாள் கொண்டு தன் தலையை அறுத்துப் பலிகொடுக்கும் நவகண்ட சிற்பம் மற்றும் மலையில் சமணர் படுக்கைகள் ஆகியவற்றையும் கண்டு ரசிக்கலாம். பழைய வரலாற்றையும் அதன் சிறப்பையும் அறிய விரும்புவோர் அவசியம் கண்டு ரசிக்க வேண்டிய இடம் அனந்தமங்கலமாகும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum