தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கழுகுமலை கோவில்

Go down

கழுகுமலை கோவில் Empty கழுகுமலை கோவில்

Post  birundha Wed Mar 27, 2013 10:27 pm

கழுகுமலை கோவில் திருநெல்வேலியிலிருந்து 60 கி.மீ தொலைவிலும், கோவில்பட்டியிலிருந்து 21 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. வைணவகோவிலான இக்கோவில் ஆதிநாதன்நேமிநாத மகாவீர பர்வநாதர், பாகுபலி ஆகியோரின் சிலைகள் உள்ளன . இங்கே பிரதித்தி பெற்ற வெட்டுவான் கோவிலும் உள்ளது.

பாண்டிய மன்னர் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இக்கோவில் இப்போதும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கிறது. கழுகுமலை என்ற தலம் கி.பி. 8-ம் நூற்றாண்டை சேர்ந்ததது. இஙகுள்ள முருகப் பெருமான், மேற்கு முகமாகக் காட்சி அளிப்பதால், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து வணங்கிச் சென்றால், தோஷம் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

அதுமட்டுமல்ல, நோய்வாய்ப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் குழந்தைகளைக் கழுகுமலை முருகனுக்கே விற்றுவிடுவதாக அக்குழந்தையின் பெற்றோர் வேண்டிக் கொள்வார்களாம். அவ்வாறு வேண்டிக் கொள்வதால் அக்குழந்தைகளுக்கு ஏற்பட்ட தோஷங்கள் நீங்கி குணமடைவார்கள்.

பிறகு பெற்றோரே அங்கு நடக்கும் ஏலத்தில் அந்தக் குழந்தைகளை விலை கொடுத்துத் திரும்ப வாங்கிக் கொள்வது இந்த ஊர் மக்களின் தொன்றுதொட்ட வழக்கமாம்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum