தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குபேர சம்பத்து அருளும் ஏகாம்பரேசுவரர் கோவில்

Go down

குபேர சம்பத்து அருளும் ஏகாம்பரேசுவரர் கோவில் Empty குபேர சம்பத்து அருளும் ஏகாம்பரேசுவரர் கோவில்

Post  birundha Wed Mar 27, 2013 10:01 pm

ஸ்தல வரலாறு......

ஏகாம்பரேசுவரர் கோவில் பல்வேறு சிறப்பு அம்சங்களை தாங்கியுள்ளது. ஏகாம்பரேசுவரர் கோவில் கோபுரவாசலை கடந்து கோவிலுக்கு நுழைந்தால் காட்சி அளிக்கும் பிரம்மாண்டமான ஸ்தபன மண்டபம், ஸ்ரீரங்கம், மதுரை கோவில்களின் சிற்பக்கலையை நம் கண்முன் நிறுத்துகிறது.

ஆலயத்தை திருப்பணி செய்த மன்னர்களின் சிலைகள், தூண்களில் யாளிமீதும், குதிரைகள் மீதும் அமர்ந்துள்ள வீரர்கள் சிற்பம், மேல்விதானத்தில் சம்பந்தர், பதஞ்சலி, பிருங்கி முனிவர், வியாக்ரபாதர் புடை சூழ சிவனடியார்கள் சிவபூஜை செய்யும் ஓவியம், நடு மையத்தில் சித்திரகுப்தர் ஓலைச்சுவடியுடன் நிற்க எருமை தடுக்கும் பெருமாள் ஓவியத்தை காண முடிகிறது.

கொடி மரத்தை கடந்து உள்ளே சென்றால் மகா மண்டபத்தில் தட்டினால் ஓசை எழுப்பும் அழகிய வேலைப்பாடுட்ன் கூடிய பல் தூண்கள் மற்றும் துவார பாலகர்கள் காட்சி தருகிறார்கள். அதனைத்தொடர்ந்து கருவறையில் ஏகாம்பரேசுவரர் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.

உட்பிராகாரத்தில் நர்த்தன விநாயகர், தட்சணாமுர்த்தி, மகா விஷ்ணு பிரம்மா துர்க்கை சண்டிகேஸ்வரர் அறுபத்து முவர் வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமான் மற்றும் கஜலட்சுமி சன்னதிகளும், நவகிரகங்களும் உள்ளன.

ஸ்தபன மண்டபத்தில் 12 ராசிக்காரர்களும் வழிபட மீன் வாகனத்தில் பன்னிரு குபேரர்கள் சிலைகள் தத்ருபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்தலத்தின் தலவிருட்சம் வில்வம். ஏறத்தாழ 900 ஆண்டுகள் முன்பு கட்டப்பட்ட இந்த கோவிலில் கலைநயமும், அழகிய நுட்பமான வேலைப்பாடுகளுடன் கூடிய கல்சிற்பங்கள் காட்சி அளிக்கின்றன.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum