தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நெய்வேலி திருத்தொண்டர் கோவில்

Go down

 நெய்வேலி திருத்தொண்டர் கோவில்  Empty நெய்வேலி திருத்தொண்டர் கோவில்

Post  birundha Wed Mar 27, 2013 9:56 pm

நெய்வேலி திருத்தொண்டர் கோவிலில் அருள்பாலிக்கும் அழகிய திருச்சிற்றம்பலமுடையார் என்ற நடராஜர் தான் உலகிலேயே உயரமானவர். இவர் உயரம் 10 அடி ஒரு அங்குலம். அகலம் 8 அடி 4 அங்குலம். எடை 2,420 கிலோ. ஐம்பொன்சிலையால் செதுக்கப்பட்டு உள்ளது. இங்கு உள்ள சிவகாமியம்மையின் உயரம் 7 அடி, எடை 750 கிலோ ஆகும்.

நாயன்மார்களுக்கு என்று அமைந்து உள்ளதால் இது திருத்தொண்டர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. 63 நாயன்மார்களில் அவரவர் நட்சத்திரம் அன்று இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் நெற்றியில் 3 கோடுகள் விபூதி பட்டை போல் உள்ளதை அபிஷேகத்தின் போது காணலாம்.

நடராஜரின் 5 சபைகளான சிதம்பரம் (பொற்சபை), மதுரை (வெள்ளிசபை), திருநெல்வேலி (தாமிரசபை), திருஆலங்காடு (ரத்தினசபை), குற்றாலம் (சித்திரசபை) என்பது போல் நெய்வேலியில் பளிங்கு சபை உள்ளது. இந்த கோவில் பளிங்கினால் கட்டப்பட்டு உள்ளது. இங்கு உள்ள ஐம்பொன்சிலை பல்வேறு மூலிகைகளால் அமைக்கப்பட்டு உள்ளது.

கோவில் வாசலில் ஒரு ஆராய்ச்சி மணியும், ஒரு மனு நீதிப்பெட்டியும் உள்ளது. பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள், பிரார்த்தனைகள், குறைகளை எழுதி இந்த பெட்டியில் போட்டு விட்டு ஆராய்ச்சி மணியை 3 முறை அடித்து விட்டு ஆலயத்தை சுற்றி வருவார்கள். பூஜை முடிந்த பின் தீட்சிதர் இந்த பெட்டியில் உள்ள பக்தர்களின் மனுக்களை எடுத்து நடராஜர் முன் ரகசியமாக படித்து விட்டு எரித்து விடுவார்.

பக்தர்கள் எழுதிய கோரிக்கைகள் நிறைவேறுவதாக ஐதீகம். கோரிக்கைகள் நிறைவேறிய பின்னர் பக்தர்கள் மீண்டும் பெட்டியில் நன்றி கடிதம் எழுதி போட்டு விடுவார்கள். கோவிலில் சித்திரை முதல் நாள் நடக்கும் விழாவில் சிவன்-பார்வதி, 63 நாயன்மார்கள், 12 திருமுறைகள் குறுந்தேரில் வீதியுலா வரும். அதுபோல் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், சேக்கிழார், திருமூலர் இவர்களின் குரு பூஜைகளின் போதும் சிவன்-பார்வதி தேர் வலம் வருவார்கள்.

கோனேரி ராஜபுரத்தில் உள்ள ஆலயத்தில் இடம் பெற்று இருக்கும் நடராஜர் உயரத்தில் 2-வது இடம் பெற்று விளங்குகிறார். இந்த ஆலய நடராஜர் சுயம்புவாக உருவானவர். இவரின் உயரம் 7 அடி. சுயம்பு என்பதன் ஆதாரங்களான மச்சம், கைரேகை, கால் நரம்புகள், காலில் சிற்பி காயப்படுத்திய தழும்பு இவைகளை இன்றும் நாம் காணலாம். கொதிக்கும் உலோக கூழை குடித்த முதியவர் சிவனின் திருவிளையாடலால் உடனே பஞ்சலோக நடராஜர் சிலையானார்.

அந்த சுயம்பு சிலை இது தான். இவரின் சன்னதி முன் உள்ள நீண்ட மண்டபத்தின் நீளம் 40 அடி. அதன் கோடியில் நின்று இவரை பார்த்தால் 60 வயது முதியவர் போலவும், அருகில் இருந்து பார்த்தால் 20 வயது இளைஞர் போலவும் காட்சி தரும் அதிசயத்தையும் நேரில் காணலாம். இந்த கோவில் கிணற்றை ஞானக்கிணறு, ஞானக்கூபம் என்று அழைக்கப்படுகிறது.

கிணற்று நீரை பார்த்தாலும், ஓம் எனக்கூறி பருகினாலும், உடம்பு மேலே தெளித்து கொண்டாலும் பாவம் விலகி சிவ ஞானம் கூடும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. ஆலயத்தில் ஒரே ஒரு தீபம் ஏற்றி வணங்கினால் மகா தீபம் ஏற்றிய பலனும், ஒரு சிறு நிவேதனம் செய்து வழிபட்டால் மகா நிவேதனம் செய்த பலனும், உமாமகேஸ்வரரான பூமியீஸ்வரர், பூமிநாயகியை ஒரு முறை வலம் வந்தால் உலகை சுற்றி வந்த பலனையும் பெறலாம்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, மார்ச் 23, 1:07 PM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி வேண்டியதை தரும் வில்லுடையான் Yaan next schedule in Morocco கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகாவில் உள்ள நெய்வேலி டவுன்ஷிப்பில் உள்ள
» திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் மூலமும் உரையும் நான்காம் பகுதி
» திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் மூலமும் உரையும் மூன்றாம் பகுதி
» திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் மூலமும் உரையும் இரண்டாம் பகுதி
» திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் மூலமும் உரையும் முதல் தொகுதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum