ராகவேந்திரர் வயது 700 ஆண்டுகள்
Page 1 of 1
ராகவேந்திரர் வயது 700 ஆண்டுகள்
ஒருசமயம் ஸ்ரீராகவேந்திரர் தங்கியிருந்த இடத்திற்கு வந்த மூன்று மலையாள ஜோதிடர்கள், அவருடைய ஜாதகத்தை வாங்கி அவருடைய ஆயுள் காலத்தைக் குறித்துத் தந்தனர். ஒரு ஜோதிடர் சுவாமிகளுடைய ஆயுள் எழுபது ஆண்டுகள் எனவும், இரண்டாமவர் முந்நூறு ஆண்டுகள் எனவும், மூன்றாவது ஜோதிடர் எழுநூறு ஆண்டுகள் எனவும் சொல்ல, கூடியிருந்த மக்கள் ஜோதிடர்களைக் கேலி செய்தார்கள்.
``ஒரு மனிதர் முந்நூறு ஆண்டுகளும் எழுநூறு ஆண்டுகளும் உயிர் வாழ முடியுமா'' என்று அவர்கள் கேட்க, சுவாமிகள் அனைவரையும் அமைதியாக இருக்கச் சொல்லி, மூவரும் சரியாகக் கணித்திருக்கிறார்கள் என்று கூறி, அதற்கு விளக்கமும் அளித்தார்.
அதாவது, தன்னுடைய உடல் இந்த மண்ணில் எழுபது ஆண்டுகள் இருக்கும் என்றும், ஜீவசமாதி அடைந்து முந்நூறு ஆண்டுகள் பிருந்தாவனத்தில் இருக்கப் போவதாகவும், தன்னை உள்ளன்போடு நேசிக்கும் மக்களோடு தான் எழுநூறு ஆண்டுகள் இருக்கப் போவதாகவும், முடிவாக பிரம்ம லோகம் சென்று சங்குகர்ணனாக இருக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
1601-ம் ஆண்டு தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரியில் அவதரித்த சுவாமிகள், 1671-ம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம் மந்த்ராயலத்தில் பிருந்தாவனப் பிரவேசம் (ஜீவ சமாதி) செய்தார். பின்னர் முந்நூறு ஆண்டுகள் அதாவது 1971-ம் ஆண்டு வரை பிருந்தாவனத்தில் இருந்தவாறே தன் பக்தர்களுக்கு அருள்புரிந்தார்.
பின்னர் 2671-ம் ஆண்டு வரை தன் பக்தர்களுக்காக நேரிலேயே வந்து அருள்புரிவார் என்பது ஐதீகம். இதை ஸ்ரீ ராகவேந்திரர் பலமுறை தன் பக்தர்களுக்கு உணர்த்தியிருக்கிறார்.

gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» ராகவேந்திரர் வயது 700 ஆண்டுகள்
» 13 வயது சிறுமியை கற்பளித்த 52 வயது இரு மனைவி காரன்: பெற்றோர் மூடி மறைப்பு!
» வவுனியாவில் பாலியல் வல்லுறவு: 9, 10 வயது சிறுமிகள் சிதைப்பு: 59 வயது முதியவர் கைது
» 45 வயது மைத்துனியிடம் சில்மிஷம்! மறுத்ததால் மிதித்துக் கொன்ற 61 வயது அக்கா புருஷன்!
» தமிழில் ஜோதிடம், வயது குறைவான ஆணுடன் திருமணம், வயது அதிகமான மணப்பெண்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum