அட்சய திருதியை மகிமையை உணர்த்திய ஸ்ரீராகவேந்திரர்
Page 1 of 1
அட்சய திருதியை மகிமையை உணர்த்திய ஸ்ரீராகவேந்திரர்
விஜயராகவ நாயக்கர் ஆட்சியில் மழை இல்லாமல் நாடு வறட்சியில் அல்லப்பட்டது. மழை இல்லை அதனால் விவசாயம் இல்லை. அதனால் உணவு இல்லை. அரசருக்கே அடுத்த வேலை உணவுக்கு திண்டாட்டம் உண்டானது. என்ன செய்வது? மந்திரி சபையை கூட்டி ஆலோசித்தார் அரசர்.
அப்போது ஒரு மந்திரி, ``நம் ஊருக்கு ஸ்ரீராகவேந்திரர் வந்திருக்கிறார். அவர் சிறந்த மகான். அவர் நமக்கு நல்ல வழியை காட்டுவார்'' என்று கூறினார். அரசரும் உடனே, ``ஸ்ரீராகவேந்திர சுவாமிக்கு மரியாதை செலுத்தி அழைத்து வாருங்கள்'' என்று உத்தரவிட்டார். ஸ்ரீராகவேந்திர சுவாமி அரசரை சந்தித்தார்.
தன் நாடு மழை இல்லாமல் வறுமையின் பிடியில் இருக்கிறது. மழை பெற சுவாமிகள் அருள் செய்ய வேண்டும் என்று அரசர் ஸ்ரீராகவேந்திரரிடம் வேண்டிக் கொண்டார். மக்களும் சுவாமிகளிடம் தங்கள் நிலையை எடுத்துச் சொல்லி அழுதார்கள்.
நாட்டின் நிலையையும் மக்களின் நிலையையும் நேரில் கண்ட சுவாமிகள், ``நெல் களஞ்சியத்திற்கு போகலாம் வாருங்கள்'' என்று அரசரையும் மக்களையும் அழைத்துக் கொண்டு நெல் களஞ்சியத்திற்கு சென்ற ஸ்ரீராகவேந்திர சுவாமிகள், அங்கு சிறிய அளவில் இருந்த நெல்லின் மேல் ``அட்சயம்'' என்ற எழுதி, அங்கு இருந்த சில மக்களுக்கு தன் திருகரத்தால் நெல்லை தானம் செய்தார்.
அங்கே ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. 50 பேருக்கு கூட போதாத அளவில் இருந்த நெல், இருப்பு, சுவாமியின் மகிமையால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அள்ளி அள்ளி தந்தும் குறையவில்லை. பிறகு சில மணி நேரத்திலேயே மழை பெய்ய தொடங்கியது. சில மாதங்களிலேயே விவசாயம் பெருகியது. வறட்சி நீங்கியது. பிறகு தான் மக்கள் ராகவேந்திரரின் மகிமையை உணர்ந்தார்கள்
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» அட்சய திருதியை தினத்தன்று என்ன நிற ஆடை அணியலாம்
» அட்சய திருதியை சிறப்பு ஸ்லோகம்
» அட்சய திருதியை சிறப்பு ஸ்லோகம்
» அட்சய திருதியை வீட்டு அலங்காரம்
» ஐஸ்வர்யங்களை அள்ளி தரும் அட்சய திருதியை
» அட்சய திருதியை சிறப்பு ஸ்லோகம்
» அட்சய திருதியை சிறப்பு ஸ்லோகம்
» அட்சய திருதியை வீட்டு அலங்காரம்
» ஐஸ்வர்யங்களை அள்ளி தரும் அட்சய திருதியை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum