தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாரணாசி என்னும் காசி

Go down

வாரணாசி என்னும் காசி Empty வாரணாசி என்னும் காசி

Post  birundha Wed Mar 27, 2013 4:13 pm

காசி-பெயர்க்காரணம்.....

காசியஸ் என்ற ஆரியர்கள் முதலில் கங்கைக் கரையில் வந்து தங்கியதால் காசி என்று பெயர் வந்ததாம். காசா என்னும் மன்னனின் ஆட்சியில் இந்த நகரம் இருந்ததால் காசி என்னும் பெயரைப் பெற்றது என்றும் பலர் சொல்கிறார்கள். காசியின் புனித நீரான கங்கையில் இரண்டு ஆறுகள் கலக்கின்றன.

காசியின் கங்கையில் வட எல்லையாக `வாரணா' என்னும் ஆறும், தெற்கு எல்லையாக `அசி' என்னும் ஆறும் ஓடி கடைசியில் கங்கையில் கலப்பதால் `வாரணாசி' என்னும் பெயர் வந்ததாகக் கூறுவார்கள். தலங்களில் சிறந்த தலம்-காசி, தீர்த்தங்களில் சிறந்த தீர்த்தம்-கங்கை, மூர்த்திகளில் சிறந்த மூர்த்தி-வஸ்வநாதர். சிவபெருமானும் வந்து தங்கியது காசியில்தான். இறுதிக் காலத்தில் முக்தி பெற விரும்புகிறவர்கள் தங்குவதும் காசியில்தான்.

காசியின் பெருமை.........

காசித்தலம் மட்டும் எதனால் சிறப்பாக போற்றப்படுகிறது? காசி மிகவும் பழமையான நகரமாகும். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் பழமையானது. காசி நகரம் பல முறை தாக்கப்பட்டுள்ளது. காசி விசுவநாதர் ஆலயமும் பலமுறை இடிக்கப்பட்டு அந்த இடங்களில் எல்லாம், இஸ்லாமிய மன்னர்களால் மசூதிகள் கட்டப்பட்டன.

இருந்தும் காசியில் விசுவநாதர் ஆலயம் மீண்டும் கட்டப்பட்டது. பண்டைக்காலம் முதலே இந்து மதத்தின்-தலை நகரமாக தலைமை நிலையமாக காசி இருந்து வருகிறது. பண்டைக்காலம் முதல் இன்று வரை ஞானிகளும், முனிவர்களும் தவம் செய்ய வரும் இடம் காசிதான். ஆதிசங்கரர் இந்து மதத்தைப் பரப்புவதற்கு முக்கிய இடமாகத் தேர்வு செய்து காசிக்கு வந்தார்.

துளசிதாசர், இங்குதான் இறை பக்தியைப் பரப்ப ஆரம்பித்தார். கபீர் தாசரும், குருநானக்கும் மத ஒன்றுமையை நிலை நிறுத்த தேர்ந்தெடுத்த இடம் காசி. முக்தத் தலங்களில் காசியும் ஒன்று துவாரகை காஞ்சிபுரம், மதுராபுரி, அயோத்தி, ஹரித்துவார், அவந்திகா, வாரணாசி ஆகிய ஏழு தலங்களில் முக்தி அடைந்தால் மீண்டும் மனிதப் பிறப்பு இல்லையாம்.

இதில் முதன்மையாகக் காசி விளங்குகிறது. ஞானிகளுடன், மனிதனாகப் பிறந்த பாமரனும் முக்தி அடைவதற்காக காசியில் வந்தே உயிர் விட விரும்புகிறான். காரணம், இங்கே உயிர் விடும்போது அன்னையான பார்வதிதேவி தன் மடியில் கிடத்தி அவனுக்கு வியர்வையும், களைப்பும் ஏற்பட்டு விடாமல் தன் முந்தானையால் வீசுவாராம்.

சிவபெருமனோ அப்போது உயிர்விட்ட மனிதனின் காதில் தாரக மந்திரத்தை ஓதி அவனைச் சொர்க்கத்திற்கு அனுப்புவாராம். இத்தகையவர்களுக்கு மட்டும் மீண்டும் பிறவி கிடையாது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உயிர்விடும்போது காசித் தலத்தை மனதால் நினைப்பவர்களுக்கு முக்தி உண்டு.

மன்னர்களாக கஜினி முகம்மது, குத்புதின், ஒளரங்கசிப் என ஒவ்வொருவரும் காசியைப் கைப்பறி அழித்தனர். விசுவநாதர் ஆலயம் இருந்த இடங்களை எல்லாம் அழித்தார்கள். பதினெட்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு குவாலியர் மகாராணியால் கட்டப்பட்டுள்ள விசுவநாதர் ஆலயமே இப்போது உள்ளது. விசுவநாதருக்கு கட்டப்பட்ட மூன்றாவது ஆலயமாகும் இது.

பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு இரண்டுமுறை கோவிலை இடித்த விவரம் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளது. ஒளரங்கசீப் 1759-ல் கோவிலில் இருந்து தூக்கி எறிந்த சிவலிங்கம் கங்கை நதியிலிருந்து எடுக்கப்பட்டு இப்போது உள்ள ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறைவன் அர்ச்சகரின் கனவில் தோன்றி "கங்கையில் இந்த இடத்தில் இருக்கிறேன்.

என்னை எடுத்துக் குவாலியர் ராணி அகல்யா பய் மூலம் கோவில் கட்டு'' எனப்பணித்தாராம். அந்த ஆலயமே இன்று நாம் காண்பது, அகல்யாபாய் கட்டிய கோவிலின் விமானத்திற்கு ரஞ்சித்சிங் என்னும் பஞ்சாப் அரசன் பொன் தகடுகள் பொருத்திக்கொடுத்தான்.

எல்லாவற்றிற்கும் மேலாகத் தேவர்கள் வாழும் வானத்தையும், காசிநகரத்தையும் ஒரு தராசில் பிரமன் நிறுத்திப் பார்த்தாராம். காசிநகரம் இருந்த தட்டு கீழேயும், தேவர்கள் இருந்த தட்டு மேலேயும் இருந்ததாம். எல்லாம் தேவர்களும் காசிக்கு இணையில்லை என்று உலகுக்குச் சொல்லவே இந்த உதாரணம்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மோட்சத்தைத் தரும் ஏழு நகரங்களில் உஜ்ஜயினியும் ஒன்று. காசி அயோத்தி, மதுரா, ஹரித்வார், காஞ்சி, அவந்தி (உஜ்ஜயினி), துவாரகை ஆகியவை ஏழு மோட்சபுரிகள் என்கிறது காசி காண்டம்.இவ்வாறு பல்வேறு சிறப்புகளைக் கொண்ட உஜ்ஜயினி நகரின் நாயகமாக விளங்குவது மகா காளேஸ்வரர் திரு
» காசி காசி
» காசி
» காசி யாத்திரை
» காசி யாத்திரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum