தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரீ சமர்த்த சத்குரு சாய் நாத் மந்திர் - அம்பத்தூர்

Go down

ஸ்ரீ சமர்த்த சத்குரு சாய் நாத் மந்திர் - அம்பத்தூர் Empty ஸ்ரீ சமர்த்த சத்குரு சாய் நாத் மந்திர் - அம்பத்தூர்

Post  birundha Wed Mar 27, 2013 1:24 pm

அம்பத்தூர் கமலாபுரம் காலனியில் (ராக்கி தியேட்டர் அருகே) பிரம்மாண்டமாக அமைந்துள்ள பாபா கோவில். ஓம் ஸ்ரீ சமர்த்த சத்குரு சாய் நாத் மந்திர் என்று அழைக்கப்படும் இந்த கோவில் பாபா அருள் வாக்குப்படி எழுப்பப்பட்டது. சீரடியில் உள்ளது போல் 4 வேளை ஆரத்தி, பாபா மார்பிள் சிலை, 9 அடி உயரம் நிற்கும் பாபா சிலை பாபா பாதம், விநாயகர், ஆஞ்சநேயர் தத்தாரியர், சிவப்பரிவார், நந்திகேசுவரம், வியாழக்கிழமை பல்லக்கு வீதி உலா, தண்டம், உதி, சட்கா, ஆசீர்வாதம் என அனைத்தும் இங்கு உண்டு.

இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாபா கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து மன நிறைவு அடைகின்றனர். இந்த கோவில் உருவானது பற்றி அதனை நிர்வகிக்கும் செல்வக்குமார் என்ற மோத்தி பாபா கூறியதாவது:-

2004-ம் ஆண்டு இந்த இடத்தை வாங்கி பாபா அருள் வாக்குப்படி கோவில் எழுப்பப்பட்டது. கோபுரம் கட்டும் போது ஒரு நாள் புயல் மழை காற்று பயங்கரமாக வீசியது. மற்ற பக்கத்து கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்ட போது பாபா கோவில் கோபுரத்துக்கு மட்டும் எந்த சேதாரமும் ஏற்படவில்லை. பாபா அருளால் கோபுரம் கட்டும் பணி வேகமாக நடந்து முடிந்தது. 2006 ஆண்டு ஆகஸ்டு மாதம் கும்பாபிஷேகம் நடத்தினோம்.

சீரடியில் உள்ளது போல் இங்கு அனைத்து தரிசனமும் காணலாம். ராமநவமிக்கு தூளி கட்டுவோம். தூளியில் உள்ள பொருளை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு பாபா அருளால் குழந்தை பாக்கியம் கிட்டும். எப்போதும் அன்னதானம் இங்கு வழங்கப்படும். பல்லக்கில் பாபாவை யார் வேண்டுமானாலும் தூக்கலாம். அவர்களது மன பாரம் குறையும்.

இவ்வாறு மோத்தி கூறினார்.

சிறப்பு அம்சங்கள்........

* இந்த கோவில் நவ பக்தியை (9 வகை பக்தி) கிடைக்கும் விதமாக அமைந்துள்ளது.

* குருஸ்தானம்: அமைந்துள்ள பாபாவின் உயரம் 9 அடி ஆகும். இது நவ பக்தியை குறிக்கின்றது. அவருடைய விஸ்வரூப தரிசனம் அவரை நாடி வரும் பக்தர்களுக்கு கேட்டதை உடன் கொடுத்து ஆசி வழங்குகிறார்.

* கட்கா துவாரக மாயி பாபா அருகில் சட்கா உள்ளது. இந்த சட்காவை பாபா எப்பொழுதும் தன் கையில் வைத்திருப்பார். பாபா பல்லக்கு ஊர்வலம் நடைபெறும் பொழுது இந்த சட்கா மூலம் ஆசி வழங்கப்படுகிறது.

* கோதுமை: இங்கு வைத்திருக்கும் கண்ணாடி பீரோவில் கோதுமை மூட்டை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த கோதுமை மூட்டை ஒவ்வொரு வருடமும் ராமநவமி அன்று (பாபா பிறந்த நாள்) உள்ளே வைக்கப்பட்டு அடுத்த ஆண்டு ராமநவமி அன்று எடுத்து பிரசாதமாக எல்லோருக்கும் வழங்கப்படும்.

* திருப்பல்லக்கு ஊர்வலம்: பிரதி வியாழன் தோறும் மாலை 7 மணி அளவில் திருப்பல்லக்கு ஊர்வலம் நடைபெறும். இந்த திருபல்லக்கு ஊர்வலத்தில் பாபா நன்கு அலங்கரிக்கப்பட்ட திரு பல்லக்கில் அமர்ந்து வாத்யங்கள் முழங்க பக்தர்கள் திருபல்லக்கின் முன்னால் பஜனைகள் பாடியும், கோலாட்டங்கள் ஆடியும் பக்தர்கள் புடை சூழ பாபா திருப்பல்லக்கில் பவனி வருகிறார்.

* பாபாவின் சித்திரம்: திருப்பல்லக்கு ஊர்வலத்தில் வைக்கப்பட்ட சித்திரம் (பாபா படம்) சீரடியில் இருந்து வாங்கப்பட்டது.

* கோல உதி: திருப்பல்லக்கு ஊர்வலம் நடைபெறும் போது பல்லக்கு வைப்பதற்கு முன்னால் ரங்கோலி கோலம் போடப்படுகிறது. அதன் மேல் திருப்பல்லக்கு வைக்கப்பட்டு பாபா பல்லக்கில் ஊர்வலம் செல்கிறார். பல்லக்கு ஊர்வலம் முடிந்ததும் பாபா (படம்) உள்ளே சென்றவுடன் கோல உதி பிரசாதத்தை எடுத்து நெற்றியில், உடம்பில் பூசிக் கொண்டால் எல்லா வியாதிகளுக்கும் சகல ரோக நிவாரண மருந்தாக இருக்கும்.

* தண்டம்: இது பாபா கையில் எப்போதும் இருக்கும்.

* உணவே பிரம்மம்: ஏழைகளின் மீது அன்பாக இருந்து அவர்களுக்கு அன்னதானம் செய்தால் பாபாவின் அருளை பெறுவது உறுதி. * பாபாவின் கதைகள்: இக்கோவிலின் கதவுகளில் பாபாவின் சித்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

* உதி: இத்திருக்கோவிலில் தரப்படும் உதி பாபாவின் அருளால் எல்லாவித நோய்களையும் தீர்க்க கூடிய சர்வ வல்லமை படைத்தது. தண்டம் பிடிப்பதன் பலன் பாபாவின் ஆரத்தின் போது பாபாவிற்கு தண்டம் பிடித்து, பாபாவுக்கு சேவை செய்வதன் மூலம் தங்கள் மனதில் உள்ள கவலைகள், துன்பங்கள், நோய்கள், சகல தோஷங்கள், நிவர்த்தி அடைந்து வாழ்க்கையில் மன நிம்மதியும் சகல சந்தோஷங்களும் உண்டாகும்.

தண்டம் பிடிக்கும் நேரம்........

வைகறை ஆரத்தி: காலை 6.15 நண்பகல்
ஆரத்தி: 12 மணி மாலை
ஆரத்தி: மாலை 6 மணி இரவு ஆரத்தி 8.30 மணி.
ஆண்கள் மட்டும் தண்டம் பிடிக்க வேண்டும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum