தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எனது வாழ்க்கையை அறிய ரசிகனுக்கு உரிமை இல்லை : சித்தார்த் பேட்டி

Go down

எனது வாழ்க்கையை அறிய ரசிகனுக்கு உரிமை இல்லை : சித்தார்த் பேட்டி Empty எனது வாழ்க்கையை அறிய ரசிகனுக்கு உரிமை இல்லை : சித்தார்த் பேட்டி

Post  ishwarya Wed Mar 27, 2013 1:23 pm

சென்னை: எனது சொந்த வாழ்க்கை பற்றி ரசிகர்களிடம் பேச மாட்டேன். அதை அறிய அவர்களுக்கு உரிமை இல்லை என்றார் சித்தார்த். ‘பாய்ஸ்‘, ‘காதலில் சொதப்புவது‘ எப்படி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சித்தார்த். ‘நான் ஈ‘, ‘நீ தானே என் பொன் வசந்தம்‘ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சமந்தா. இருவரும் ‘ஜபர்தஸ்த்‘ என்ற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. கடந்த வாரம் சித்தார்த்-சமந்தா இருவரும் காளஹஸ்தி கோயிலுக்கு ஜோடியாக சென்று தடையில்லாமல் திருமணம் நடப்பதற்கான பரிகார பூஜையில் பங்கேற்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் திருமணத்துக்கு தயாராக இருப்பதாக கூறி இருக்கிறார் சித்தார்த். அவர் கூறியது: எனது சொந்த வாழ்க்கை பற்றி குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் தவிர வேறு யாரிடமும் பேசுவதில்லை. அது என்னுடைய தீவிர ரசிகராக இருந்தாலும் சரி. அவர்களுக்கு அந்த உரிமை கிடையாது. டிக்கெட் எடுத்து தியேட்டரில் படம் பார்த்துவிட்டு நன்றாக இருந்தால் 10 பேரிடம் படத்தை பார்க்க சொல்வார்கள். நன்றாக இல்லாவிட்டால் 100 பேரிடம் சொல்லி படம் பார்க்க வேண்டாம் என்பார்கள். இப்போதைக்கு நான் திருமணத்துக்கு தயாராக இருக்கிறேன். குடும்பம், குழந்தை குட்டியோடு வாழ்வது விரைவில் நடக்கும். பல நடிகைகளுடன் என்னை இணைத்து எழுதி இருக்கிறார்கள். அதற்கு பதில் சொன்னதில்லை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum