திருநீர்மலை
Page 1 of 1
திருநீர்மலை
திருநீர்மலை திவ்ய தேசம், சென்னை பல்லாவரத்திலிருந்து 6. கி.மீ. துரத்தில் இருக்கிறது. இந்தத்தலத்தில் இரு நூறு அடி உயரமுள்ள ஓர் சிறிய மலை இருக்கிறது. மலை அடிவாரத்தில் பெருமாளின் சந்நிதி ஒன்றும் மலை மேல் மூன்று சந்நிதிகளும் இருக்கின்றன.
மலை மேலேறிச் செல்ல படிக்கட்டுகள் வசதியாக இருக்கின்றன. அடிவாரக் கோவிலில் உள்ள மூலவர் நீலமுகில் வண்ணன், நின்ற திருக்கோலத்தில், கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.
தாயார் அணிமாமலர் மங்கை, தனிக்கோவில் நாச்சியாராக எழுந்தருளியிருக்கிறார். மலைமேல் சாந்த நரசிம்மன், வீற்றிருந்த திருக்கோலத்தில், கிழக்கு நோக்கியும், ரங்கநாதன், மாணிக்க சயனமாகத் தெற்கு நோக்கியும், திருவிக்கிரமன் நின்ற திருக்கோலமாகக், கிழக்கு நோக்கியும் சேவை சாதிக்கிறார்கள்.
மலையில் கீழ் `நின்றான்' என்று சொல்லும் நிலையில் பெருமாள் மலையின் மேல் `இருந்தான்! நடந்தான்!' என்ற திருக்கோலங்களில் பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். மலைமேல் ரங்கநாயகித் தாயார், தனிக் கோவில் நாச்சியாராகக் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார்.
வால்மீகி இங்கு வந்து தியானம் செய்ய ராம, லட்சுமண, பரத, சத்ருக்னர்கள், சுக்ரீவனோடும் அனுமனோடும் அவருக்குக் காட்சி தந்து மறைந்தார்களாம். திருமங்கையாழ்வார், ஆறு மாத காலம் இங்குத் தங்கியிருந்து பெருமாளை வழிபட்டார். அப்பொது இந்த மலையைச் சுற்றி நீர் அரண் போல் இருந்ததால், நீர்மலை என்ற பெயர் இதற்கு உண்டாயிற்று.
பூதத்தாழ்வாரும், இந்தத் திவ்ய தேசத்தை மங்களாசாசனம் செய்திருக்கிறார். பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் திருவரங்கம், வடவேங்கடம், திருக்கோட்டியூர் ஆகிய தலங்களோடு இத்தலத்தையும் இணைத்துப் பூதத்தாழ்வார் மங்ளாசாசனம் செய்துள்ளார். இங்குள்ள ராமபிரான் கல்யாண ராமனாகக் காட்சி தருதலால், திருமணம் கைகூடும் தலமாகவும், பிரார்த்தனைத்தலமாகவும் விளங்குகிறது.
இரண்டு திருத்தலங்களும் ஒரே திவ்விய தேசமாகக் கருதப்படுகிறது. ஆயுள்பலம் அதிகரிக்க வாழ்க்கை பிரச்சனையின்றிச் செல்ல குழந்தைகள் நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ குடும்பப் பிரச்சனைகள் மறைந்துபோக, திருமணத்தடைகள் நீங்க திருநீர் மலைக்கு வந்து பெருமாளைத்தரிசனம் செய்து விட்டு சென்றால் போதும் அவர்களுக்கு பஞ்சகிரகங்களின் அனுக்கிரகங்களும் கிடைக்கும். கடன் தொல்லையும் நிவர்த்தியாகும்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» திருநீர்மலை திருநீர்மலை
» திருநீர்மலை
» திருநீர்மலை திருநீர்மலை
» திருநீர்மலை
» திருமணத் தடை நீக்கும் திருநீர்மலை வாசன்
» திருநீர்மலை
» திருநீர்மலை திருநீர்மலை
» திருநீர்மலை
» திருமணத் தடை நீக்கும் திருநீர்மலை வாசன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum