தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘‘பூர்ணகிரி யுடை புண்ணியனை பூஜிப்போம் தம் நேத்திராடனப் பீடையோடு வைரியர் தாம் வைத்த வைப்பகலக் கண்டு நின்றோங் கேளீர் - வள்ளியூர் நின்றானை வள்ளி மணாளனைத் தொழுதக்கால் கிட்டும்பேரு பெரிது பெரிதே’’ -என்கிறார், குதம்பைச் சித்தர். அகத்தியரால் போற்றப்பட்ட புண்ணி

Go down

 ‘‘பூர்ணகிரி யுடை புண்ணியனை பூஜிப்போம் தம் நேத்திராடனப் பீடையோடு வைரியர் தாம் வைத்த வைப்பகலக் கண்டு நின்றோங் கேளீர் - வள்ளியூர் நின்றானை வள்ளி மணாளனைத் தொழுதக்கால் கிட்டும்பேரு பெரிது பெரிதே’’  -என்கிறார், குதம்பைச் சித்தர். அகத்தியரால் போற்றப்பட்ட புண்ணி Empty ‘‘பூர்ணகிரி யுடை புண்ணியனை பூஜிப்போம் தம் நேத்திராடனப் பீடையோடு வைரியர் தாம் வைத்த வைப்பகலக் கண்டு நின்றோங் கேளீர் - வள்ளியூர் நின்றானை வள்ளி மணாளனைத் தொழுதக்கால் கிட்டும்பேரு பெரிது பெரிதே’’ -என்கிறார், குதம்பைச் சித்தர். அகத்தியரால் போற்றப்பட்ட புண்ணி

Post  amma Fri Jan 11, 2013 1:19 pm

கண்ணுக்கெட்டிய தூரம் வரை கழனிகள். அங்கு மிங்குமாய் பூஞ்சோலைகள், அங்கே
கூவி மகிழும் குயில்கள், பாடித் திரியும் பறவைகள், நம்மை வரு டும்
இளந்தென்றல் என இயற்கை மனங்கொள்ளாமல் விரிந்து கொண்டே போகிறது. எல்லாம்
தஞ்சைத் தரணியில், காவிரித்தாய் தந்த இனிய வரங்கள்.
உலகோர்க்கெல்லாம்
அன்னம் அளிக்கும் இச்சோழ வளநாட்டின் காவிரிக் கரைகளில் அருள்பரப்பும்
பதிகளில், வடகரையில் அமையப்பெற்ற 63 தேவாரத் திருத்தலங்களுள் 18வதாக
அருள்பரப்புகின்றது, திருக்கடைமுடி. தற்போது இந்தத் தலம் கீழையூர் என்று
அழைக்கப்படுகிறது. ஏழூர்கள் சேர்ந்த மிகப்பெரிய ஊராதலால் ஏழூர் என்றும்
இவ்வூரை அழைப்ப துண்டு.

கிளுவை மரங்கள் நிறைந்த இந்தப் பகுதி
கிளுவையூர் என்றிருந்து, காலப்போக்கில் கீழையூர் என்றானது. காவிரி இங்கு
மேற்கு முகமாகப் பாய்வது சிறப்பாகும். ‘ஹர ஹர’ என்றாலே பாவங்கள் அனைத்தும்
தொலையும். அதுவும் அந்திமகாலத்தில் சொன்னால் வீடுபேறு உறுதியல்லவா? அப்படி
அந்திம காலத்தில் அருள் வழங்கும் அற்புதனாக விளங்குகிறார் இத்தலத்து
கடைமுடிநாதர். இத்தலப் பெருமானை பிரம்மாவும் கண்வ மகரிஷியும் பூஜித்து
அருள் பெற்றுள்ளனர். திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு ஒரு பதிகத்தை அருளிச்
செய்துள்ளார். அப்பர் தனது க்ஷேத்திரக் கோவையில் இத்தலத்தைப் பற்றிக்
குறிப்பிட்டுள்ளார்.

இத்தலம் பற்றி பதிகம் பாடிய திருஞானசம்பந்தர்,
எல்லாமாகத் திகழும் ஈசன் உலகின் துன்பத்திற்கு வழிவகுக்கும் மாயையாகவும்
விளங்குவதாகச் சொல்கிறார். மேற்கு பார்த்த இச்சிவாலயம் அளவில்
சிறிதாயினும் கவின் மிகுத்துக் காணப்படுகிறது. மேற்கு வாயில்
மூடப்பட்டுள்ளது. தென்பக்கச் சிறு வாயில் வழியே கோயிலுக்குள் செல்ல,
முதலில் கிழக்கு நோக்கிய தனிச் சந்நதியில் வீற்றிருக்கும் கணபதி
தரிசனமளிக்கின்றார். அருகே முருகப்பெருமானும் பத்தினியரோடு அருட்காட்சி
அளிக்கின்றார். நடுவே மேற்கு வாயிலுக்கு நேரே நந்தி, பலிபீடம் அமைந்துள்ளன.
உள்ளே புதிதாகக் கட்டப்பட்டுள்ள முகமண்டபம். அங்கே முதலில் தென்முகம்
பார்க்கும் அம்பாளின் தனி சந்நதி உள்ளது.

அம்பிகை எழில் சிந்தும்
திருக்கோலத்துடன் அபிராமியம்மன் எனும் திருநாமத்துடன் மேல் கரங்களில்
அக்கமாலையையும் தாமரை மலரையும் ஏந்தி அற்புத தரிசனம் தருகிறாள். அடுத்து,
கிழக்கே நீண்ட இடை மண்டபமும், அதனையொட்டி, அர்த்த மண்டபம் மற்றும்
கருவறையும் அமைந்துள்ளன. மூலவராக கடைமுடிநாதர் 16 பட்டைகள் கொண்ட பாண
லிங்கமாகப் பேரருள் பொழிகின்றார். 16 செல்வங்களையும் அருளும் இந்த
பெருமான், அந்திசம்ரக்ஷணேஸ்வரர் என வட மொழியில் அழைக்கப்படுகின்றார்.
முதுமை காலத்தில் காசிக்குச் செல்ல முடியாதவர்கள் இந்த கடைமுடிநாதரை
வணங்கினால் முக்தி உறுதி என நம்பப்படுகிறது. சிவனாரை வணங்கி, ஆலய வலம்
வருகையில் தேவகோஷ்ட தெய்வங்களை வணங்குகின்றோம். ஆலய வடகிழக்கு மூலையில் தல
விருட்சமான கிளுவை மரம் உள்ளது.

ஒரு சுற்று கொண்டது இவ்வாலயம். தல
தீர்த்தமாக ஆலயத்திற்கு வெளியே கருணாதீர்த்தம் விளங்குகிறது. இந்த
ஆலயத்தில் தினசரி மூன்று கால பூஜைகள் நடைபெறுகின்றன. தினமும் காலை 8 மணி
முதல் 11 மணி வரையும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் கோயில்
திறந்திருக்கும். 2000ம் ஆண்டு குடமுழுக்கு கண்ட இவ்வாலய விசேஷங்களாக
பிரதோஷம், குருவார வழிபாடு, சிவராத்திரி, ஆருத்ரா போன்றவை முறையாக
அனுசரிக்கப்படுகின்றன. மாட்டுப்பொங்கல் அன்று சிறப்பு அபிஷேகமும்,
திருவீதியுலாவும் இங்கு விமரிசையாக நடைபெறுகின்றன.

மேற்கு முகமாக
ஓடும் காவிரியில் நீராடி, கடைமுடிநாதரையும், அபிராமி அன்னையையும் வழிபட்டு,
மழலை பாக்யம் பெறலாம் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாகும்.
இத்தலத்திற்கு அருகில் நனிபள்ளி, திருநின்றியூர் போன்ற தேவார பாடல் பெற்ற
தலங்கள் அமையப்பெற்றுள்ளன. நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள
இவ்வூர், மயிலாடுதுறையிலிருந்து 12 கி.மீ. தூரத்திலும் பூம்புகாரிலிருந்து
14 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. மயிலாடுதுறை-பூம்புகார் பேருந்து
சாலையில் கீழையூர் சத்திரம் நிறுத்தத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில்
உள்ளது. செம்பனார் கோயிலில் இருந்து திருநின்றியூர் மற்றும் மங்கைமடம்
செல்லும் மினி பஸ் மூலம் இச்சிவாலயத்தினை எளிதில் அடையலாம்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum