கடும் எதிர்ப்பையடுத்து 'போர்டு' கார் விளம்பரங்கள் வாபஸ்
Page 1 of 1

சென்னை, மார்ச் 26-
தமிழ்நாட்டில் தயாராகும் 'போர்டு பிகோ' கார்கள் குறித்து, வர்த்தக வலைத்தளம் ஒன்றில் வெளியிடப்பட்ட விளம்பரங்கள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
டெல்லியில் டிசம்பர் மாதம் கற்பழிப்புக் கும்பல் நடத்திய அராஜகத்தைத் தொடர்ந்து, மத்திய அரசு சென்ற வாரம் பெண்கள் பாதுகாப்பு குறித்து கடுமையான சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்த சில நாட்களுக்குள்ளாகவே பெண்மையை இழிவுபடுத்தும் விதமாய் வெளிவந்த பிகோவின் இந்த விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இந்த விளம்பரங்கள் தற்போது நீக்கப்பட்டுளளன.
இதில் ஒரு விளம்பரம், இத்தாலியின் முன்னாள் பிரதமர் பிர்லுஸ்கோனி வெற்றிச் சின்னத்துடன் மூன்று பெண்களை பிகோவின் பின்புறம் அடைத்திருப்பது போலவும், மற்றொன்றில், அமெரிக்காவின் புகழ்பெற்ற பாரிஸ் ஹில்டன், கர்டாஷியன் சகோதரிகள் போன்ற மூவரைக் கட்டிப்போட்டிருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டிருந்தது.
பிகோவில் உங்கள் அனைத்துக் கவலைகளையும் விடலாம் என்ற வாசகத்துடன் வெளிவந்திருந்தது. இந்த விளம்பரங்கள் அனைத்தும் தற்போது வாபஸ் பெறப்பட்டுவிட்டன.
இவ்விளம்பரம், விளம்பரக் கம்பெனியின் கற்பனையில் உருவாக்கப்பட்டது என்று போர்டு தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. என்றாலும் அந்த நிறுவனம் இதற்கு மன்னிப்புக் கேட்டதுடன் இதுபோல் தவறுகள் இனி நடக்காது என்றும் தெரிவித்துள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஷகிலா படத்திற்கு சென்சார் போர்டு கடும் எதிர்ப்பு!
» புகைப்பதற்கு எதிரான விளம்பரங்கள்! பி.ப.சங்கம் வேண்டுகோள்!
» தீபாவளிக்கு மாமிச விளம்பரங்கள் வேண்டாம் - பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!
» ரயில்வே ரெக்குர்மென்ட் போர்டு
» சென்சார் போர்டு சென்றுள்ளது பில்லா 2

Permissions in this forum:
You cannot reply to topics in this forum