அமெரிக்காவில் குடியுரிமைச் சட்ட சீர்திருத்த மசோதாவை நிறைவேற்ற ஒபாமா தீவிரம்
Page 1 of 1
அமெரிக்காவில் குடியுரிமைச் சட்ட சீர்திருத்த மசோதாவை நிறைவேற்ற ஒபாமா தீவிரம்
நியூயார்க், மார்ச் 26-
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், திங்கட்கிழமை அன்று, 28 பேருக்கு குடியுரிமை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அதிபர் ஒபாமா கலந்துகொண்டு பேசியதாவது:-
நான் பதவி ஏற்கும்போது குறிப்பிட்ட, குடியுரிமை சட்டத்திருத்தம் குறித்த விவாதத்தை சபை உறுப்பினர்கள் ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கவேண்டும். அந்த மசோதா கூடிய விரைவில் சட்டமாக்கப்பட வேண்டும்.
அமெரிக்காவின் குடியுரிமை சட்டம் பல வருடங்களாகத் தொய்வடைந்த நிலையில் உள்ளது. புத்திக் கூர்மையுடனும், கடின உழைப்புடனும், அமெரிக்காவில் இடம் தேடி வருபவர்களுக்கு நாம் போதிய ஆதரவு அளிக்கவில்லை. பல வருடங்களாக இது தள்ளிப் போடப்பட்டுள்ளது. இப்போது விசாலமான, விவேகமான, நிரந்தரமான ஒரு சட்ட சீர்திருத்தத்தை ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. எனவே, விவாதம் அடுத்த மாதம் துவங்கக் கூடிய வகையில் அனைவரும் செயலாற்ற வேண்டும்.
மேலும், முதல் குடிமகனாகவோ, பூர்வீக இருப்பிடமாகவோ அமெரிக்கா இல்லாவிட்டால், அனைவருமே மற்ற இடங்களில் இருந்துதான் இங்கே வந்திருக்க வேண்டும். எனவேதான் அமெரிக்காவை குடியுரிமை பெற்றவர்களின் நாடு என்று குறிப்பிடுகின்றோம்.
இவ்வாறு ஒபாமா பேசினார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற அதிமுகவுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க: நடிகர் ஆனந்த்ராஜ்
» மருத்துவ சீர்திருத்த மசோதா-அமெரிக்க வழியை இந்தியா பின்பற்றுமா?
» தொடர் மோதல் எதிரொலி : போலீஸ் சீர்திருத்த சட்டம் ; மத்திய, மாநிலஅரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
» ஒபாமா ஒபாமா
» கென்னடி மகளுக்கு தூதர் பதவி ஒபாமா திட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum