கனடாவில் பனிப்பாறை சரிவில் சிக்கி பனிச்சறுக்கு வீரர் மரணம்
Page 1 of 1

ஒட்டாவா, மார்ச் 26-
கனடாவில் அமைந்துள்ள கொலம்பியா மலைப்பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டுகள் பிரசித்தி பெற்றவை. அங்குள்ள பனிப்பாறை தேசிய பூங்காவில் மக்கள் ஆர்வத்துடன் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவார்கள்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, பூங்காவின் அருகில் வசித்து வரும் 38 வயதான பனிச்சறுக்கு வீரர் ஒருவர், தனது இரண்டு நண்பர்களுடன் மலைப்பகுதியில் பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்தார். பின்னர் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ரெவல்ஸ்டோக் வழியே திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது பனிப்பாறை சரிவு அதிகமாக இருந்ததால், மலை உச்சியில் உள்ள நிலைமையை ஆராய்வதற்காக நண்பர்களை விட்டுத் தனியே சென்றுள்ளார்.
அப்போது மலை உச்சியில் பனிச்சரிவின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தினால், அவர் அதில் சிக்கி புதையுண்டார். பின்னர் அவரை நண்பர்கள் மீட்புக்குழுவுடன் வந்து அவரை மீட்டனர். இருப்பினும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்துவிட்டதாக மீட்புக் குழுவினர் அறிவித்தனர். இறந்தவரின் பெயர் தெரிவிக்கப்படவில்லை.
பனிச்சரிவின் தாக்கம், அதற்குரிய அளவுகோலில் 2.5 என்ற அளவினைக் காட்டியதாக கனடாவின் பனிச்சரிவு மையம் தெரிவித்துள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விண்டோஸ் 8: சரிவில் இருந்து மீள மைக்ரொஸாஃப்ட் பிரயத்தனம்

» சிக்கி ஆசனம் சிக்கி ஆசனம்
» ரசிகர்களிடம் சிக்கி ஹன்சிகா அவஸ்தை…!
» கனடாவில் தியாகராஜ ஆராதனை விழா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum