தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுடலைமாடன் கோவில்- சுடலை அவதார வரலாறு

Go down

சுடலைமாடன் கோவில்- சுடலை அவதார வரலாறு Empty சுடலைமாடன் கோவில்- சுடலை அவதார வரலாறு

Post  birundha Wed Mar 27, 2013 2:14 am

மயான பூமியில் தெய்வம் இருக்கும் என்ற நம்பிக்கை பழங்காலம் தொட்டே மக்களிடம் இருந்து வருகிறது. பெரும் தெய்வ வழிபாட்டில் வரும் சிவனை ``கொலைவன்'' என்ற பெயர் உள்ளதாக கலித்தொகை பாடல் குறிப்பிடுகிறது.

சிவனை காடுடைய சடலை பொடி பூசியவன் என்று திருஞ்ஞான சம்பந்தரும் நடுச்சாமத்தில் மயானத்தில் சிவன் நடனம் புரிவதாக காரைக்கால் அம்மையாரும் குறிப்பிடுகின்றார்கள், சிவனை போன்றே சுடலைக்கு பிணமாலை சூடும் பெருமாள் மயானச்சுடலை, எலும்புச்சுடலை என்ற பெயர்களும் உண்டு.

குமரி மற்றும் நெல்லை பகுதிகளில் ஒருசில சுடலை கோவில்களில் திருவிழாவின் போது ``கோமரத்தடிகள்'' என்று அழைக்கப்படும் சாமிக்கொண்டாடிகள் மயானத்திற்கு சென்று எலும்புகளையும் பிணத்தின் பகுதிகளையும் எடுத்துக் கொண்டு வந்து சாமி ஆடுவது வழக்கம்.

இத்தகைய காட்சிகளை தென்காசி பகுதியில் உள்ள வேதம்புதூர் என்ற ஊரில் சுடலைக் கோவிலில் இன்றும் காணலாம். சுடலைக்கும் சுடுகாட்டிற்கும் இத்தகைய தொடர்பு இருப்பதாகவும் சிவன் நள்ளிரவில் அங்கு நடனம் புரிவதாகவும் சுடலை பொடியினை சிவன் பூசிக் கொள்வதாலும், சுடலையும் சிவனும் ஒன்று என்ற வழக்கம் இன்றும் சில மக்களிடையே நம்பிக்கை உள்ளது.

ஆனால் வரலாறு உண்மையில் வேறு விதமானது, கஜமுகனை அழிப்பதற்கு கணபதியை உருவாக்கியது போல் சூரனைக் அழிக்க முருகனை படைத்ததைப் போல் சுயநல எண்ணம் கொண்ட மனித மிருகங்களை அழிக்க சுடலையை சிவபெருமான் உருவாக்கி பூமிக்கு அனுப்பி வைத்தார் என்று சொல்கிறார்கள். பூமிக்கு வந்த சுடலை அன்னை பகவதியின் காவலனாகவும், ஏவலனாகவும் பணிபுரிந்து வருகிறார்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயத்தில் பெரும் பொருள் இருப்பதை மைமூலமாக அறிந்து கொண்ட காளிப்புலையன் என்னும் மலையாள மாந்திரீகன் சுடலை வெளியில் சென்று இருந்தபோது கோவில் பொருளை கொள்ளை இட்டு சென்றானாம். இதை அறிந்த சுடலை காளிப்புலையனை கொன்று வதைத்து குற்றாலம் வழியாக சீவலப்பேரிக் வந்து குடி கொண்டானாம், அங்கிருந்து பிடி மண் மூலம் தென் தமிழ்நாடு முழுக்க இன்று சுடலை ஆண்டவன் பரந்து விரிந்து தன் ஆட்சியை நடத்தி வருகிறான். இதுதான் உண்மையான வரலாறாக கருதப்படுகிறது.

நடுஜாம படைப்பு

எல்லா தெய்வங்களுக்கும் போலவே பிரத்யேகமான வழிபாட்டு முறைகள் சுடலைக்கும் உண்டு, இவருக்கு நடுஜாம படைப்பு என்பது மிக விசேஷமானது. அந்த பூஜையின் போது அசைவம் கலந்த சோறு அர்த்த ஜாம பூஜையில் படைக்கப்படும். முட்டை, தேங்காய் கலந்து சாவாப்பலி இவருக்கு உண்டு. இவருக்கு ஜாதி பேதமின்றி யார் வேண்டுமென்றாலும் பூஜை செய்யலாம். இவர் ஆலயத்தில் பிரம்மசக்தி, சிவனடைந்த பெருமாள், அனைந்த அம்மை, இசக்கி, பேச்சி, முண்டன், லாட சன்னியாசி, முனியன் போன்ற தெய்வங்களும் குடிகொண்டு இருப்பார்கள். இதில் பிரம்ம சக்தி சுடலையின் அன்னை என்றும் அனைந்த அம்மை மனைவியாகவும், சிவனடைந்த பெருமாளை சுடலையின் குருவாகவும் மக்கள் வழிபட்டு வருகிறார்கள்.

சுடலை ஏவப்படும் சக்தி மற்றும் ஈவு இரக்கமற்றவர் என்று மக்கள் கருதுவது மாடன்களையே குறிக்கும். சுடலையை குறிக்காது, காலப்போக்கில் இரண்டையும் ஒன்றாக்கி குழப்பி விட்டனர் என்று ஆன்மீக வரலாற்று ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

சுடலைமாடன் கொடைவிழா

சுடலைமாடன் ஆதிகாலம் முதல் தமிழகத்தில் வணங்கப்பட்டு வரும் தெய்ரம். தென் மாவட்டங்களில் இருக்கும் கிராமங்களில் எல்லா சமூகத்தாராலும் ஊருக்கு வெளியே சுடுகாட்டுக்கு அருகில் பெரும்பாலும் மணல், சுண்ணாம்பு கலந்து திண்டுகளாக பிரமிட் போன்ற வடிவிலும் 3 முதல் 15 அடி உயரம் வரை செய்யப்பட்டு உச்சியில் கூர்மையில்லாமல் சதுரமாக அமைக்கப்பட்டு வெள்ளையடிக்கப்பட்டு இருக்கும்.

கிராமங்கலில் சுடலை மாடனுடன் முண்டன், புலமாடன், கருப்பசாமி, முனீஸ்வரன், பலவேசக்காரன், மாயாண்டி, முனியாண்டி போன்ற ஆம் தெய்வங்களும் இசக்கியம்மன், பேச்சி, முப்பிடாரி, உச்சிமாகாளி, பிரம்மசக்தி போன்ற பெனண் தெய்வங்களுக்கும் பீடங்கள் அமைக்கப்பட்டும் சில இடங்களில் சீலைகள் அமைக்கப்பட்டும் வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இத்தெய்வங்களின் கோவில்களுக்கு பெரும்பாலும் கூரை வேய்வதில்லை. எளிமையாகவே இருக்கும். ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியிலோ இத்தெய்வங்களுக்கு கொடை விழா நடத்தப்படுகிறது. இந்த தெய்வங்களுக்கு ஆடு, பன்றி, சேவல் பலியிடப்பட்டு அசைவ உணவுடன் மது, சுருட்டு படைக்கப்படுகிறது.

கொடை விழாவின் போது சாமியாடிகள் ஆவேசதச்துடன் ஆட்டமாடி, குறி சொல்லும் வழக்கத்தை கடைப்பிடிக்கின்றனர். மக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து அதை தீர்க்க வழி கேட் சாமிடாயிகளும் அதற்கு பதில் அளிக்கின்றனர். இப்பதிலை தெய்வமே தெரிவித்ததாக நினைத்து அதன்படி நடக்கும் வழக்கம் கிராமப் பகுதிகளில் இன்னும் உள்ளது.

திருமணம் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளின் போது அனைவரும் இறைவனை பொங்கல் படையலிட்டு வணங்குவார்கள். தங்களின் குடும்ப பிரச்சினை நீங்க, நோய்களிலிருந்து விடுபட, திருமணத்தடை நீங்க, நல்மக்கள் பேறு அமைய, பேய் பிசாசுகளில் இருந்து விடுபட, கல்வி, தொழிலில் சிறந்து விளங்க, எதிரிகளிடமிருந்து தங்களை காக்க இம்மக்கள் சுடலைமாடன் தெய்வங்களை முழுமையாக வணங்கி வருகின்றனர்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum