தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரீராமபிரான் கோவில் - அயோத்தி

Go down

ஸ்ரீராமபிரான் கோவில் - அயோத்தி Empty ஸ்ரீராமபிரான் கோவில் - அயோத்தி

Post  birundha Wed Mar 27, 2013 2:09 am

ஸ்தல வரலாறு:

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பைசாபாத் புகைவண்டி நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் சரயு நதிக்கரையில் அயோத்தி திவ்ய தேசம் முத்திதரும் ஏழு நகரங்களுள் ஒன்றாக அமைந்துள்ளது. ராமபிரான் சக்கரவர்த்தித் திருமகனாக அவதாரம் செய்த தலம். இது பெரியாழ்வார், குலசேகராழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற பதி.

பெருமாள் ஸ்ரீராமர், ரகுநாயகன், சக்கரவர்த்தித் திருமகன் என்று அழைக்கப்படுகிறார். இங்கு ராமர், லட்சுமணர், சீதை, ஆஞ்சநேயர் கோவில்கள் பல உள்ளன. இட்சுவாகு தவமிருந்து பிரமதேவனிடமிருந்து பெற்ற பள்ளிக்கொண்ட நாதனை இத்தலத்தில் வைத்து முதற்கண் வழிபடப் பெற்றது. பின்னர் இதனை விபீஷணருக்கு ராமபிரான் பரிசாக அளித்தார். அது ஸ்ரீரங்கத்தில் நிலைகொண்டது என்பது புராண வரலாறு.

தென்னிந்திய கோவிலின் அமைப்புப்படி இந்தக் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. கோவில்களில் தென்னிந்திய வைஷ்ணவர்கள் தான் பூஜை செய்கிறார்கள். பிரம்மாவின் மூத்த பிள்ளை ஸ்வாயம்புவமனு. இவருக்கு ஸ்ரீமந் நாராயணன் வைகுண்டத்தின் ஒரு பகுதியான அயோத்தியை பிரம்மா மூலம் கொடுத்தார்.

அந்த அயோத்தியை பிரம்மா மனு சக்கரவர்த்தியிடம் கொடுக்க மனு சக்கரவர்த்தி அந்த அயோத்தியை பூலோகத்திற்கு கொண்டு வந்து நதியின் தென் கரையில் ஸ்தாபித்தார். இதுதான் அயோத்தி என்று நாம் போற்றப்படும் புண்ணிய பூமி. பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடிப் பொடி ஆழ்வார், திருமங்கையாழ்வார் நம்மாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்திருக்கின்றனர்.

எனினும் கோவிலில் இதற்கான கல்வெட்டு இருப்பதாகத் தெரியவில்லை. ஸ்ரீராமபிரானது கோவிலுக்கு ஒரு தடவை சென்று வந்து விட்டால் ஏழேழு ஜன்மத்திற்கும் எந்த விதபாவமும் அண்டாது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum