தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அட்சயபுரீஸ்வரர் கோவில்

Go down

அட்சயபுரீஸ்வரர் கோவில் Empty அட்சயபுரீஸ்வரர் கோவில்

Post  birundha Wed Mar 27, 2013 2:08 am

அட்சயபுரீஸ்வரர் கோவில் தஞ்சாவூர் அருகே பட்டுக்கோட்டையில் இருந்து தெற்கே 30 கி.மீ. தொலைவில் விளங்குளம் என்ற பகுதியில் அமைந்துள்ளது. பேராவூரணியிலிருந்து நகரப் பேருந்திலும் இந்தத் கோவிலுக்கு செல்லலாம்.

கல்வெட்டு ஆராய்ச்சிகளின்படி, இத்திருக்கோவில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக தெரிகிறது. இந்த ஆலயத்தில் அருள் பாலிக்கும் ஈசன் ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர்.

புராணங்களின்படி சூரிய பகவானின் மகன் சனி பகவானுக்கும் இன்னொரு மகன் எமதர்மனுக்கும் பகை இருந்து வந்தது. அந்தப் பகை காரணமாக சனி பகவானின் காலில் எமதர்சனம் ஓங்கி அடிக்க... சனி பகவானுக்கு ஊனம் ஏற்பட்டது.

கால் ஊனத்துடன் விமோசனம் தேடி மானுட ரூபத்தில் பூலோகத்தில் பல திருத்தலங்களுக்கும் அலைந்தார். அப்போது விளாமரங்கள் அடர்ந்த (விளங்குளம்) பகுதிக்கு வந்தபோது, பரந்து விரிந்து தரையில் காணப்பட்ட ஒரு விளாமரத்தின் வேர் தடுக்கி, அருகில் உள்ள ஒரு பள்ளத்தில் விழுந்து விட்டார் சனி பகவான்.

அந்த நாள் திருதியையும், பூச நட்சத்திரமும் சனி வாரமும் சேர்ந்த புனித நன்னாள். சனி விழுந்த அந்த நேரத்தில், பல கோடி யுகங்களாக மறைந்திருந்த பூச ஞான வாவி என்ற ஞான தீர்த்தம் சுரந்து, சனி பகவானை மேலெழுப்பி கரை சேர்த்தது.

இந்நிகழ்வில், சனி பகவானின் கால் ஊனம் நிவர்த்தி ஆகி விட்டது. மேலும் விளா வேர் தடுத்து விழுந்து சுரந்த குளமானதால், விளம்குளம் என்றழைக்கப்பட்டு, பின்னர் இந்தக் கிராமம் விளங்குளம் என்று அழைக்கப்படுகிறது.

இந்தத் கோவிலில் விஜய விநாயகர் மேற்கு முகமாக இருந்து அருள்பாலிக்கிறார். அட்சயபுரீஸ்வரர் சனிக்குக் காட்சி அளித்து, இந்த தலத்தில் திருமணப் பிராப்தியையும் அவருக்குத் தந்தார்.

பின்னர் குறைவில்லாத செல்வத்தை அள்ளித்தரும் அட்சயபுரீஸ்வரராக இங்கு நிலை கொண்டார். இறைவன் இங்கே, அருவுருவமாக லிங்க வடிவில் அருள்புரிகிறார். அம்பாளுக்கு, அபிவிருத்தி நாயகி என்னும் பெயர் வழங்கப்படுகிறது. தவிர ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீநாகர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீசண்டி கேஸ்வரர், ஸ்ரீசூரிய பகவான், ஸ்ரீபைரவர், ஸ்ரீகஜலட்சுமி உள்பட பல தெய்வங்களுக்கும் சந்நிதி உண்டு.

சனி கால் ஊனம் நீங்கி மந்தா, ஜேஷ்டா என்னும் இரு பத்தினியரை மணம் செய்து கொண்டு ஆதி சனீஸ்வரராக, திருமணக்கோலத்தில் இங்கே அருள்பாலித்து வருகிறார்.

இங்கு அமைந்துள்ள பூச ஞான வாவி தீர்த்தத்தில் பூச நட்சத்திரம், திருதியை, சனிக்கிழமை ஆகிய ஏதாவது ஒரு நாளில் நீராடி வழிபட்டால், உடல் துன்பங்களும், நரம்பியல் சம்பந்தப்பட்ட நோய்களும் நிவர்த்தியாகும். திருமணத் தடைகளும் விலகும்.

சனி பகவானின் நட்சத்திரம் பூசம். பூச மருங்கர் என்னும் சித்தர், சனிப்பரணி சித்திரை சத்குருவாக கொண்டவர். பூசமருங்க சித்தர் ஸ்தூல, சூட்சும வடிவங்களில் வழிபடும் தலம் விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் ஆலயம்.

அட்சய திருதியை அன்று விளங்குளம் ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் ஆலயம் சென்று சிறப்பு வழிபாடு செய்வது மிகவும் நல்லது. மூல மூர்த்தி சிவலிங்கத்துக்கு, சந்தனக்காப்பில் முத்துக்கள் பதித்து வழிபட வேண்டும். பின், ஸ்ரீசனிஸ்வரமூர்த்திக்கு புனுகு கலந்த சந்தனக் காப்பிட்டு, அதில் எள், அரிசி, கோதுமை, பாதாம் பருப்பு, குங்குமப்பூ மற்றும் நவதானியங்களைப் பதித்து பூஜிக்க வேண்டும்.

இதனால், சந்ததிகள் உணவுப்பஞ்சம் இல்லாமல் நல்வாழ்வு வாழ்வார்கள். பெண் பிள்ளைகள் புகுந்த வீட்டில் துன்பமில்லாமல் வாழ்வர். அட்சய திருதியை அன்று குறைந்தது ஒருவார காலத்துக்கு தேவையான உணவுப்பண்டங்களை தானமாக அளிக்க வேண்டும். இது நவக்கிரகங்களின் அனுக்கிரக சக்திகளைப் பெருக்கிடும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum