தட்சிணாமூர்த்தி கோவில்
Page 1 of 1
தட்சிணாமூர்த்தி கோவில்
ஸ்தல வரலாறு:
வேலூர் மாவட்ட எல்லையான திருமால்பூரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கோவிந்தர்பாடி அகரம். இங்குள்ள தட்சிணாமூர்த்தி கோவில் கி.பி. 6-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்தியாவில் மொத்தம் 5 இடங்களில் குருபகவான் கோவில் உள்ளது. அவை காளஸ்திரி, ஆலங்குடி, சுசீந்திரம், மாயவரம், கோவிந்தர்பாடி ஆகும்.
`குட்டிச் சுவரை எட்டி உதைத்தால் கொட்டிக் கொடுக்கும் கோவிந்தர்பாடி...' என்று பெருமாளே பாடியதாகவும் அதனால் இவ்வூர் கோவிந்தர்பாடி என வழங்குவதாகவும் இக்கோவில் புராண வரலாற்றில் கூறப்படுகிறது. சிவனின் மறு உருவமே தட்சிணாமூர்த்தி என்றும் சொல்கிறார்கள். இக்கோவிலில் குரு பகவான் அமர்ந்துள்ள எழில் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.
அவர் சின் முத்திரையுடன் காட்சி தருகிறார். இதன் பொருள் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை ஆகிய மூன்றும் துறந்தால் எதையும் கடைப்பிடிக்க முடியும் என்பதாகும். ஆதிசங்கரர் இக்கோவிலுக்கு வந்து குருபகவானை வணங்கி சென்றதாகக் கூறப்படுகிறது. இங்கு ஆதிசங்கரர் சிலையும் உள்ளது.
இக்கோவில் பழமையும், பெருமையும் வாய்ந்தது மட்டுமல்ல, தனிச் சிறப்பும் வாய்ந்தது. இக்கோவிலின் ஒரே கோபுரத்தில் இரண்டு மூலவர் சன்னதிகள் அமைந்துள்ளன. இதுபோல் வேறு எங்கும் இல்லை. இக்கோவிலை சுற்றி சிம்ம வாகனத்தில் ஐந்து முக விநாயகர் சிற்பம், வரசித்தி விநாயகர், பாலமுருகன், பெருமாள், காலபைரவர் உள்பட சுவாமி சன்னதிகள் உள்ளன.
மேலும் கைலாசநாதர் கோவிலின் மண்டபத்தில் ஒரு சுரங்கப் பாதை உள்ளது. இது காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு செல்கிறது எனச் சொல்லப்படுகிறது. இக்கோவிலின் ஸ்தல விருட்சம் வில்வம் ஆகும். இங்கு குருபகவானுக்கு வில்வம், எலுமிச்சை, விபூதி ஆகியன கொண்டு 9 வாரங்கள் தொடர்ந்து வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.
பிரதி வியாழக்கிழமை இக்கோவிலில் விசேஷ தினமாகும். மேலும் குருப் பெயர்ச்சி விழா இக்கோவிலில் கொண்டாடப்படும் சிறப்பான விழா ஆகும். மனிதன் பெறும் பாக்கியங்களில் மணவாழ்க்கையும் ஒன்று. அந்த மண வாழ்க்கைச் சிறப்பாக அமைய குருவின் திருவருள் தேவை. அந்தக் குருப் பகவான் தான் தட்சிணாமூர்த்தியாக கோவிந்தர் பாடியில் அமர்ந்து அருள் பாலித்து வருகிறார்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» தட்சிணாமூர்த்தி ஸ்லோகம்
» தட்சிணாமூர்த்தி ஸ்லோகம்
» தட்சிணாமூர்த்தி திருக்கோவில் - பட்டமங்கலம்
» தட்சிணாமூர்த்தி வடிவச் சிறப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum