தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுந்தர மகாலிங்கம் கோவில்

Go down

சுந்தர மகாலிங்கம் கோவில் Empty சுந்தர மகாலிங்கம் கோவில்

Post  birundha Wed Mar 27, 2013 1:53 am

ஸ்தல வரலாறு.....

மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே சதுரகிரியில் உள்ளது பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம் கோவில். மலைக்கோவிலான இங்கு தற்போதும் பல சித்தர்களும், ரிஷிகளும் வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் சிவனை வணங்கிய கோரக்கர் சித்தர் இங்குள்ள ஒரு குகையில் தவம் இருந்தார். அப்போது அவர் சுவாமிக்கு அரிசி மாவு படைத்து வணங்கினார்.

அவரது காலத்திற்கு பிறகு சீடர்கள் அரிசி மாவுடன் சர்க்கரை, நெய், தேன், ஏலம், சுக்கு ஆகியவை கலந்த கலவையை நைவேத்யமாக படைத்தனர். அந்த கலவையையே, லிங்க வடிவில் அமைத்து பூஜை செய்தனர். இதன் அடிப்படையில் தற்போதும் இங்குள்ள அன்னதான மடத்தில் இதேபோல மாவு வைத்து சிவ வழிபாடு நடக்கிறது.

பூஜை முடிந்த பின்பு இந்த மாவையே பிரசாதமாக தருகின்றனர். இதை `கோரக்க சித்தர் பிரசாதம்' என்றே சொல்கிறார்கள். இந்த மாவினை கோரக்க சித்தரே தருவதாக நினைத்து, சாப்பிட்டால் நோய்கள் உடனடியாக நீங்குவதாகச் சொல்கிறார்கள்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum