தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தாமரையின் பெருமை

Go down

தாமரையின் பெருமை Empty தாமரையின் பெருமை

Post  gandhimathi Sat Jan 19, 2013 12:55 pm

மகாலட்சுமியின் தோற்றத்தை எண்ணுவோர்க்கு தாமரை மலரின் நினைவு வராமல் போகாது. ஏனெனில் மகாலட்சுமியின் சிறப்பான உறைவிடம் தாமரை மலர் ஆகும். தெய்வ மலர் என்று தாமரை மலருக்கு ஒரு பெயருண்டு. மகாலட்சுமி மட்டுமன்றி, கலை மகளாம் சரஸ்வதி தேவியும் தாமரை மலரில் தான் வீற்றிருக்கிறாள்.

தாமரை மலருக்கு வேதங்களுக்கு உள்ள பெருமையும் மகிமையும் உண்டு என்ற கருத்தில் கம்பர் தாமரை மலரை மறை என்ற பெயரால் குறிப்பிடுகிறார். தாமரை மலர் இறைவனை பூசிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தலையில் யாரும் சூடிக்கொள்வதில்லை.

திருமாலுக்கு மிகவும் பிரியமான மலர் தாமரை தான். திருமகளின் உருவம் தாமரை மலரை பிரதிபலிப்பதாகவே உள்ளது என்ற கருத்தினை தணிகை புராணப் பாடல் தெரிவிக்கிறது. திருமகளுடன் நெருக்கமான தொடர்பு கொண்ட காரணத்தால் தாமரை மலருக்கு தனி மகத்துவம் கிடைத்துள்ளது.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum