தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நாளை தீபாவளி பண்டிகை: எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு உகந்த நேரம்

Go down

நாளை தீபாவளி பண்டிகை: எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு உகந்த நேரம் Empty நாளை தீபாவளி பண்டிகை: எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு உகந்த நேரம்

Post  meenu Fri Jan 18, 2013 2:29 pm

நாளை (புதன்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு உகந்த நேரம் அதிகாலை 3 மணி என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானதாக தீபாவளி பண்டிகை அமைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. அன்றைய தினம் அதிகாலையிலேயே எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு வித, விதமான புத்தாடை அணிந்து, வகை, வகையான இனிப்புகளுடன், பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த வருடம் தீபாவளி பண்டிகை நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி தினத்தில் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து, வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட உகந்த நேரம் எது என்பது பற்றி, சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வேத வாத்தியார் பிரம்மஸ்ரீ ஏ.ஜி.ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் கூறியதாவது:-

தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதம் அனைத்து வகையிலும் சிறப்பு பெற்றுள்ளது. இந்த மாதத்தில், கிருஷ்ணபக்ஷம், அமாவாசை திதிக்கு முன்தினம் சதுர்த்தசி திதி அன்று நடுநிசி காலம் கழிந்து, பிரம்ம முகூர்த்த காலத்துக்கு முன்பாக நரகாசுரனை, ஸ்ரீகிருஷ்ண பகவானும், ராதையும் வதம் செய்ததாகவும், இந்த நாளை அனைத்து மக்களும் புத்தாடை அணிந்து குதூகலத்துடன் கொண்டாட வேண்டும் என்று நரகாசுரன் வேண்டிக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

அந்த வகையில்தான் இந்த சதுர்த்தசி திதி நரக சதுர்த்தசி என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, நாளை (புதன் கிழமை) கொண்டாடப்படுகிறது. பொதுவாக, இரவு நேரங்களில் எண்ணெய் ஸ்நானம் செய்தல் கூடாது. ஜனன, மரண காலங்களிலும், உதயம், அஸ்தமன காலத்திலும் எண்ணெய் தேய்த்து குளிப்பது சரியல்ல. ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய், வியாழன், வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது.

சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு உகந்த நாளாகும். தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு எந்த தோஷமும் கிடையாது. அன்றைய தினம் எண்ணெய் குளியலை `கங்காஸ்நானம்' என்று புனிதமாக சொல்வார்கள். எண்ணெயில் லட்சுமியும், குளிப்பதற்கு பயன்படுத்தும் வென்னீரில் கங்கா தேவியும், உடலில் தேய்க்கப்படும் எண்ணெயைப் போக்குவதற்காக பயன்படுத்தும் சீயக்காய்த் தூளில் வாயு பகவானும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

தீபாவளி அன்று, எண்ணெய் தேய்த்து, சுடு தண்ணீரில் அதாவது வென்னீரில் குளிப்பதே சிறப்பாகும். வென்னீர் வைக்கும் பாத்திரத்தில், தீபாவளிக்கு முன் தினம் இரவில், வேப்பம் பட்டை, ஆலம் பட்டை, அரசம் பட்டை, அத்திப்பட்டை, கடுக்காய், சுக்கு ஆகியவற்றை ஊர வைத்து மறு நாள் அதிகாலையில் சூடு செய்து குளிக்கவேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதற்கு `அவ்ஷத ஸ்நானம்' என்று அழைக்கப்படுகிறது.

"ஆஸ்வயுக்கிருஷ்ணபஷேது,
சதுர்தஸ்யாமிநோதயே,
தைலஸ்நானம் ஜலைருஷ்னை:
கங்கா ஸ்நானம் சமம்பவேத்''

என்று வேதங்களில் கூறப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு தீபாவளி நாளை (புதன்கிழமை) வருகிறது. நாளை அதிகாலை 3 மணியில் இருந்து 4.53 மணிக்குள் எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, தீபம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும். அதன்பின் புத்தாடை அணிந்து வீட்டில் உள்ள பெரியோர்களிடம் ஆசி பெற்று இனிப்பு சாப்பிட்டு, பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியோடும் கொண்டாடலாம்.

இந்த தீபாவளி புதன்கிழமையில் வருவது சிறப்பு பெற்றுள்ளது. அத்துடன், விஷ்ணுவின் வாரமான புதன்கிழமையும், இந்திரனின் நட்சத்திரமான சித்திரையும் கூடியிருப்பது அசுவமேதயாகத்துக்கு உண்டான பலன் இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் கிடைப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. "சுபகும்சசம், யுவதி ரோசமானா'' என்ற வேதவாக்கியத்தின்படி இந்த தீபாவளி அனைத்து வகையிலும் சிறப்பு பெற்றுள்ளது.

தங்கள் கணவன் உடல் நலத்துடன் எல்லா வளமும் பெற்று நீடுழி வாழவேண்டும் என்றும், தங்கள் தாலிபாக்கியம் நிலைக்க வேண்டும் என்பதற்காகவும், கேதார கவுரி விரதம் மேற்கொள்கிறார்கள். இந்த ஆண்டு, கேதார கவுரி விரதம் நாளை (புதன்கிழமை) வருகிறது. காலை 6 மணியில் இருந்து 7.30 மணி வரையிலும், 9-10, 11-12, மதியம் 11/2 மணியில் இருந்து 3 மணி வரை, மாலை 4-5, இரவு 7 மணியில் இருந்து 10 மணி வரையில் நல்ல நேரம் கூடியுள்ளது. இந்த நேரங்களில் வழிபாடு செய்வது உகந்தது.

இவ்வாறு பிரம்மஸ்ரீ ஏ.ஜி.ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் கூறினார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum