பாபாவின் பாதுகைகள்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
பாபாவின் பாதுகைகள்
பாபாவைத் தெய்வம் என்று மக்கள் வணங்க தொடங்கிய பிறகு சாய்பாபாவின் மூன்று பக்தர்கள் ஒன்று கூடிப் பேசினார்கள்.முதன் முதலில் பாபா சீரடிக்கு வந்ததற்கும், புனிதமான வேப்ப மரத்தடியில் அமர்ந்ததற்கும் ஒரு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். பாபாவின் பாதுகைகளை ஒரு கல்லில் வடிவமைத்து வேப்ப மரத்தடியில் வைக்கலாம் என்று முடிவு செய்தனர்.
உடனடியாக பாபாவின் பக்தரான "கோத்தாரே'' என்பவர் பாதுகைகளின் வடிவமைப்பை வரைந்தார். "உபாசனி'' என்ற பாபாவின் தலைசிறந்த பக்தர் அதில் சில திருத்தங்களைச் செய்தார். தாமரைகள், மலர்கள் சங்கு முதலியவைகளை அதில் வரைந்தார். வேப்பமரத்தின் தனிச்சிறப்பையும் பாபாவின் யோக சக்திகளையும் விளக்கும் ஒரு ஸ்லோகத்தைப் பொறித்து வைக்கும்படியும் கூறினார்.
உபாசனி அளித்த அறிவுரைகளை ஏற்றுக்கொண்டு அதன்படியே கோத்தாரே மும்பையில் பாதுகைகளைத் தயார் செய்தார். அவைகளைத் தம் உதவியாளர் மூலம் சீரடிக்கு அனுப்பி வைத்தார். அவர் அவற்றை பாபாவிடம் காட்டினார். ஜி.கே. தீட்சித் என்னும் பக்தர் அவற்றைக் கண்டோபா கோவிலில் இருந்து தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாகத் துவாரகமாயிக்கு வந்தார்.
பாபா அந்த பாதுகைகளைத் தொட்டு "இவை இறைவனுடைய திருவடிகள். வேப்பமரத்தடியில் குரு பூர்ணிமா தினத்தன்று இவற்றைப் பிரதிஷ்டை செய்யுங்கள்'' என்று கூறினார். அதன்படி பாதுகைகள் கோலாகலத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
அந்நிகழ்ச்சிக்கு பாபாவின் பக்தர்கள் திரண்டு வந்தனர். பக்திப் பரவசத்துடன் பாதுகைகளை வணங்கினர். அன்று முதல் வேப்ப மரத்தடி பாதுகைக்கு மாலையில் விளக்கு ஏற்றவும், முறைப்படி பூஜைகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சி 1912-ஆம் ஆண்டு நடைபெற்றது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» பக்தர்களுக்கு பாபாவின் பதில்கள்
» ஷீர்டி சாயி பாபாவின் திவ்ய நாம சரிதம்
» ஷீர்டி சாயி பாபாவின் திவ்ய நாம சரிதம்
» ஷீர்டி சாயி பாபாவின் திவ்ய நாம சரிதம்
» ஷீர்டி சாயி பாபாவின் திவ்ய நாம சரிதம்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum