தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆண்களுக்கு இணையாக பெண்களை தைரியசாலியாக வளர்க்க வேண்டும்: பெற்றோருக்கு டாப்ஸி அறிவுரை

Go down

ஆண்களுக்கு இணையாக பெண்களை தைரியசாலியாக வளர்க்க வேண்டும்: பெற்றோருக்கு டாப்ஸி அறிவுரை Empty ஆண்களுக்கு இணையாக பெண்களை தைரியசாலியாக வளர்க்க வேண்டும்: பெற்றோருக்கு டாப்ஸி அறிவுரை

Post  ishwarya Tue Mar 26, 2013 6:28 pm


தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார் டாப்ஸி.

விஷ்ணுவர்தன் இயக்கும் பெயரிடப்படாத படத்தின் வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளது. “மறந்தேன் மன்னித்தேன்” படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. தமிழ், தெலுங்கில் தயாராகும் முனி படத்தின் மூன்றாம் பாகத்திலும் நடிக்கிறார். ஐதராபாத்தில் டாப்ஸி அளித்த பேட்டி வருமாறு:-

என் உயர்வுக்கு காரணமாக இருப்பது எனது அம்மா. டெல்லியில் எங்கள் வீட்டில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு தியேட்டரில்தான் தெலுங்கு படங்கள் ரிலீசாகும். நான் நடித்த படங்கள் அங்கு திரையிடப்படும் போது தவறாமல் போய் பார்ப்பார். தெலுங்கு மொழி தெரியாது. ஆனாலும் திரையில் என்னை பார்ப்பதற்காகவே போவார்.

என்னை தைரியசாலியாக வளர்த்தார். பொதுவாக பெண் குழந்தைகளை ஆண் குழந்தைகளுடன் விளையாட பெற்றோர் அனுமதிப்பது இல்லை. அப்படி இருக்கக்கூடாது. ஆண்களுக்கு இணையாக பெண்களை தைரியசாலிகளாக வளர்க்க வேண்டும். பயத்தில் அவர்களை வளர்க்கக்கூடாது.

என் அம்மா தைரியசாலியாக என்னை வளர்த்தார். ஆண்களுடன் சேர்ந்து விளையாட தடை போடவில்லை. அவர்களுடன் சகஜமாக பழகினால்தான் வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ள முடியும். அதை என் தாய் உணர்ந்து இருந்தார்.

சிறு வயதிலேயே டான்ஸ் கிளாஸ் போனேன். கதக் நடனமும் கற்றேன். அவை இப்போது சினிமாவில் சாதிக்க உதவுகின்றன.

மாடலிங் போன பிறகு படிப்பில் அக்கறை குறைந்தது. பத்தாவது வகுப்பில் 46 சதவீத மார்க் பெற்றேன். அப்பா திட்டினார். அம்மா கண்டிக்கவில்லை. பிளஸ்-2 தேர்வில் 91 சதவீதம் மார்க் வாங்கினேன். பெற்றோர் பாராட்டினார்கள்.

சினிமா நடிகையாக எனக்கு ஆசை ஏற்பட்டதும் அம்மாவிடம் சொன்னேன். தடைபோடவில்லை. இப்போது நடிகையாக வளர்ந்து விட்டேன்.

இவ்வாறு டாப்ஸி கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum