திருமணமானவர் என்பது அனன்யாவிற்கு தெரியும்
Page 1 of 1
திருமணமானவர் என்பது அனன்யாவிற்கு தெரியும்
தனது காதலர் ஆஞ்சநேயனுக்கு ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்துக் கோரியுள்ள விஷயம் நடிகை அனன்யாவிற்கு ஏற்கனவேத் தெரியும் என்றும், அதனை பெற்றோரிடம் மறைத்து நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு சில தமிழ்த் திரைப்படங்களில் நடித்த நடிகை அனன்யாவிற்கு, கேரள தொழில் அதிபர் ஆஞ்சநேயனுடன் கடந்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்பதை மறைத்து, இரண்டாவது திருமணத்திற்கு முயற்சித்தார் என அனன்யாவின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து விவரம் அறிய, அவரது வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, அனன்யாவிற்கு இந்த விஷயம் ஏற்கனவே தெரியும், அனன்யா ஆஞ்சநேயனை காதலிக்கிறார். அதனால் திருமணமான விஷயத்தை எங்களிடம் மறைத்து திருமணத்திற்கு சம்மதம் வாங்கிவிட்டார். இந்நிலையில், இந்த விவரம் எங்களுக்குத் தெரிய வந்ததும் காவல்நிலையத்தில் புகார் அளித்தோம்.
ஆனால், எங்கள் பெண்ணின் விருப்பம்தான் எங்களுக்கு முக்கியம். விவாகரத்து நடைமுறைகள் முடிந்ததும் திருமணம் பற்றி பேசுவோம் என்று அவரது அம்மா கூறியுள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தேடினால் தெரியும்
» போகப் போகத் தெரியும்
» கால்களின் அழகு மீன்களுக்கு தெரியும்
» என் லிமிட் எனக்குத் தெரியும்! – கார்த்தி
» காஜல் தங்கச்சி தேருவாரா? நாளை தெரியும்
» போகப் போகத் தெரியும்
» கால்களின் அழகு மீன்களுக்கு தெரியும்
» என் லிமிட் எனக்குத் தெரியும்! – கார்த்தி
» காஜல் தங்கச்சி தேருவாரா? நாளை தெரியும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum