மே 5–ந்தேதி நடைபெறும் மாநில
Page 1 of 1
மே 5–ந்தேதி நடைபெறும் மாநில
சென்னையில் நடைபெற உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாநில மாநாட்டில் உணவு பாதுகாப்பு சட்டத்தை மாற்றி அமைக்க வலியுறுத்துவோம் என்று பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறினார்.
ஆலோசனைக்கூட்டம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் ஸ்ரீஆனந்தா ஓட்டலில் நடந்தது. கூட்டத்துக்கு திருப்பூர் மாவட்ட தலைவர் எஸ்.பி.ராஜசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரத்னா ஜே.மனோகர் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் பாலநாகமாணிக்கம், மாநில இணைச்செயலாளர்கள் கணேசன், சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, பொதுச்செயலாளர் கே.மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசியதாவது:
30வது மாநில மாநாடு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், வருகிற மே மாதம் 5ந் தேதி 30வது மாநில மாநாடு, சென்னை தாம்பரம் அருகே வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள வி.ஜி.பி. திடலில் நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டை அகில இந்திய வணிகர்களின் பாதுகாப்பு மாநாடாக நடத்த உள்ளோம். மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து 2 லட்சம் வணிகர்கள் பங்கேற்க உள்ளனர். அகில இந்திய வணிகர் சம்மேளன நிர்வாகிகள், இந்தியாவில் 27 மாநிலங்களின் வணிகர் சங்க பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
உணவு பாதுகாப்பு சட்டம்
மாநாட்டில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக்கூடாது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், வணிகர்களுக்கு எதிரான அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக வணிகர்கள் தீர்ப்பு அளிக்கும் சரித்திர மாநாடாக நடைபெறும். மே 5ந் தேதி அன்று கடைகளுக்கு விடுமுறை அளித்து குடும்பத்தினருடன் வணிகர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநாடு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
மத்தியில் ஆட்சி மாற்றம் கொண்டு வருவோம்
வணிகர்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி வரும் சூழலில் அதற்கெல்லாம் தீர்வு காணும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக இந்த 30வது வணிகர் தின மாநில மாநாடு நடைபெறும். 6 கோடி தமிழர்களில் வணிகர்களாகிய நாங்கள் 1 கோடி பேர் இருக்கிறோம். நாங்கள் நேரடியாக மக்களிடம் தொடர்பு உள்ளவர்கள். மத்திய அரசு எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து, அவர்கள் முடிவில் மாற்றம் கொண்டு வரவில்லை என்றால், நாங்கள் ஆட்சியில் மாற்றம் கொண்டு வருவோம். இவ்வாறு ஏ.எம்.விக்கிரமராஜா கூறினார்.
கூட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், திருப்பூர் மாவட்ட வியாபாரிகள் சம்மேளன நிர்வாகிகள் வேலுசாமி, தனீஷ், முத்து, சிவபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் லிங்க துரை நன்றி கூறினார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு கன்னட நடிகை குத்து ரம்யாவுக்கு கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குத்து ரம்யாவின் தாத்தா எஸ்.எம்.கிருஷ்ணா. காங்கிரஸ் கட்சியி
» ஆடி மாத விசேஷ வழிபாடுகள் நடைபெறும் தலம்
» 7-ந் தேதி முதல் படப்பிடிப்பு நடைபெறும்: எஸ்.ஏ.சந்திரசேகரன்
» அமெரிக்காவில் நடைபெறும் திரைப்பட விழாவில் கமலஹாசனுக்கு விருது
» கர்நாடக மாநில கோயில்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum