தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வில்லனாக நடிக்க தைரியம் வேண்டும் - மாதவன்

Go down

வில்லனாக நடிக்க தைரியம் வேண்டும் - மாதவன் Empty வில்லனாக நடிக்க தைரியம் வேண்டும் - மாதவன்

Post  ishwarya Tue Mar 26, 2013 6:07 pm



ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்து அவ்வப்போது காமெடி மற்றும் ஆக்சன்களிலும் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் மாதவனிடம் அவரது நடிப்பு அனுபவத்தைப் பற்றிக் கேட்டோம்.

அவரே மனம் திறக்கிறார்...

பொதுவாக சினிமா நடிகர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள கடுமையாக உடற்பயிற்சி செய்கிறார்களே அதுபோன்ற எண்ணம் உங்களுக்கு உண்டா?

நிச்சயமாக இல்லை, சினிமாவில் இருப்பதால் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டியது அவசியம். அதனை நான் கடைபிடிக்கிறேன். ஆனால் என்னால் 6 பேக்ஸ் எல்லாம் வைக்க முடியாது. எனக்கு மூட்டு விலி பிரச்சினை உள்ளது. எனவே, கடுமையான உடற்பயிற்சிகளை செய்ய மாட்டேன். ஆனால் என் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற பயிற்சிகளை சரியாக செய்வேன்.

வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பீர்களா?

வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க அதிக தைரியம் இருக்க வேண்டும். நம்மால் வில்லனாக நடிக்க முடியும் என்று முதலில் மக்களை நம்ப வைக்க வேண்டும். அதுவே பெரிய காரியம். அதற்குத்தான் தைரியம் வேண்டும். பார்க்கலாம் என்னால் மக்களுக்க நம்ப வைக்க முடிகிறதா என்று...

படங்களை எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்?

கதையை கேட்கும் போது நான்றாக இருக்கும், ஆனால் அதைப் படமாக பார்க்கும் போது சரியாக இருக்காது. ஒரு கதையை கேட்கும் போதே அதை நான் தியேட்டரில் பார்க்க விரும்புவேனா என்பதை யோசிப்பேன். அப்படித்தான் பல படங்களை தேர்வு செய்கிறேன். எல்லாமே சரியாக அமைந்தால்தான் ஒரு படம் நல்லபடியாக வெளியாகும் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum