காதலில் சொதப்புவது எப்படி? என்ன சொல்கிறது படம்
Page 1 of 1
காதலில் சொதப்புவது எப்படி? என்ன சொல்கிறது படம்
காதலில் சொதப்புவது எப்படி படம், நிச்சயம் காதலர்களை ஈர்க்கும் வகையிலான படமாக உள்ளது. தலைப்பே அதற்கு பலம். சித்தார்த்-அமலா பால் நடித்துள்ள இப்படித்தை இயக்கியிருப்பது பாலாஜி மோகன்.
பாலாஜி மோகன் தனது 10 நிமிட குறும்படத்தை, நடிகர் சித்தார்த்தின் வேண்டுகோளின் படி அதேத் தலைப்பில் படமாக்கியுள்ளார். 10 நிமிடங்கள் சொன்னதை இரண்டரை மணி நேர படமாக்குவது என்பது லேசான காரியமல்ல. அதையும் சரியாகச் செய்துள்ளார் பாலாஜி மோகன். நடிகர் சித்தார்த்தும் இப்படத்தின் கோ புரட்யூசர் என்பது குறிப்பிடத்தக்கது.
காதலர்களோ, தம்பதிகளோ, ஒருவரையொருவர் சரியாக புரிந்து கொள்ளாததால் ஏற்படும் பிரிவையே மையக் கருவாக வைத்து எடுத்துள்ள இப்படத்தின், ஒவ்வொரு காட்சிகளையும் மிகக் கவனமாக எடுத்துள்ளார் இயக்குநர். ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும், அனைவருமே தங்களுக்கான இடங்களை நிறைவாக பூர்த்தி செய்துள்ளனர்.
அருண் - பார்வதி ஜோடி கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதும், பிரச்சினையை சீராக்குவதில் தான்தான் கெட்டிக்காரன் என்று நினைக்கும் சிவா, அவர்களை சேர்த்து வைக்க முயல்கிறார். மாறாக நிலைமை இன்னும் மோசமாகி விடுகிறது. அந்த இடத்தில் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கிறார் சிவா.
அதேப்போல, ராம்-சாத்தி-ஜான் ஆகியோரது முக்கோணக் காதலை அழகாக முடித்து வைப்பது ரசிக்க வைக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும், முழுமையாகவும் நிறைவாகவும் ஜொலிக்க வைத்துள்ள பாராட்டு இயக்குநரையே சேரும். சில இடங்களில் காட்சிகள் தொக்கி நிற்பதையும் காண முடிகிறது.
தற்போதைய நவீன தொழில்நுட்பம், பல உறவுகளை உருவாக்குவதையும், அதேப்போல எளிதாக உடைப்பதையும் நுட்பமான காட்சிகளாக படம்பிடித்துள்ளார் இயக்குநர்.
காதலில் சொதப்புவது எப்படி படம் நிச்சயமாக இளைஞர்களுக்கு பிடிக்கும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாலிவுட்டுக்கு போகிறது 'காதலில் சொதப்புவது எப்படி'
» காதலில் சொதப்புவது எப்படி – திரை விமர்சனம்
» மரணம்-என்ன சொல்கிறது?
» கீதை என்ன சொல்கிறது?
» இலக்கியம் வாழ்க்கைக்கு என்ன சொல்கிறது
» காதலில் சொதப்புவது எப்படி – திரை விமர்சனம்
» மரணம்-என்ன சொல்கிறது?
» கீதை என்ன சொல்கிறது?
» இலக்கியம் வாழ்க்கைக்கு என்ன சொல்கிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum