தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

செல்போனில் கிடைத்த கூடாத நட்பு

Go down

செல்போனில் கிடைத்த கூடாத நட்பு Empty செல்போனில் கிடைத்த கூடாத நட்பு

Post  meenu Tue Mar 26, 2013 5:42 pm

செல்போனில் தொடர்பில் கிடைத்த நட்பை வைத்து சிறைக் கைதியுடன் காதல் வளர்த்த பெண் கைக்குழந்தையுடன் சென்னையில் மீட்கப்பட்டார்.

செல்போன் தொடர்பு

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியை சேர்ந்தவர் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி கைக்குழந்தை உள்ளது. இவரது பக்கத்து வீட்டு பெண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு போன் வந்தது. அதில் பேசியவர் ஆண் குரலில் பேசினார்.

உடனே அந்த பெண், செல்போனை ராணியிடம் கொடுத்துள்ளார். இதில் ஏற்பட்ட தொடர்பை தொடர்ந்து அந்த ஆண் நபரிடம் ராணி அடிக்கடி பேசி வந்துள்ளார்.

இந்த நட்பு அவர்களுக்குள் காதலை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தன்னை ஏற்றுக் கொள்ளும்படி கூறிய ராணியிடம், தனக்கு பணக்கஷ்டம் அதிகம் உள்ளதாகவும், இதனால் உடனே ஏற்றுகொள்ள முடியாது என்றும் அந்த ஆசாமி கூறியுள்ளார்.

பணம் பறிக்கும் நோக்கம்

உடனே ராணி, பணம் எவ்வளவு வேண்டும். முடிந்த அளவு உதவி செய்கிறேன். உங்களை தேடி எங்கு வரவேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், எனக்கு உடனடியாக ஒரு லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. அதை உடனே எனக்கு அனுப்பு, அதன் பின்னர் நான் இருக்கும் இடத்தை தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதற்கு ராணி, தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை, ஆனால் 3½ பவுன் தங்க செயின் உள்ளது. அதை விற்று உங்களின் பணத்தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். உடனே மதுரை வந்து செயினை வாங்கி செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

இதைக்கேட்ட அந்த ஆசாமி, நான் ஒருவரை அனுப்புகிறேன், அவரிடம் நகையை கொடுத்து விடு என்று தெரிவித்துள்ளார். அவர் கூறியது போல் ஒருவர் வந்து ராணியிடம் செயினை வாங்கிச் சென்றார்.

வேலூர் சிறைக் கைதி

அதன்பின்னர் ராணி, போனில் பேசி சென்னைக்கு வருவதாகவும், அங்கு வந்து தன்னை அழைத்து செல்லும்படி அந்த நபரிடம் கூறியுள்ளார். அவரும் இதை ஏற்றுக் கொண்டதுடன் ராணியின் கணவர் செல்போன் எண்ணையும் அவர் வாங்கி கொண்டார். இதன்பின் கைக்குழந்தையுடன் ராணி ரெயிலில் சென்னை சென்றார்.

இந்தநிலையில் மனைவியை காணாமல் அவரது கணவர் ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் செய்தார். அவரது செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ஒரு ஆசாமி, நான் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி. செல்போனில் ஏற்பட்ட நட்பை தொடர்ந்து அவரது மனைவியுடன் பேசிய விவரங்கள் அனைத்தையும் தெரிவித்துள்ளான். உடனே சென்னை சென்று உனது மனைவி ராணியை அழைத்துக் கொண்டு செல்லுமாறும் தெரிவித்துள்ளான்.

சென்னையில் மீட்பு

இதுபற்றி போலீசில் அவர் தெரிவித்துள்ளார். சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் வேலூர் ஜெயிலில் இருந்து பேசியது தெரியவந்தது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் அங்கிருந்தபடி பல மணி நேரம் ராணியுடன் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வேலூர் ஜெயில் அதிகாரியிடம் தெரிவித்தனர்.

இதற்கிடையில் ராணியின் கணவர் சென்னை சென்று அவரை அழைத்து வந்தார். அவரிடம் இருந்து 3½ பவுன் செயினை பறிக்க தான் இவ்வளவு நாடகமும் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

எச்சரிக்கை அவசியம்

இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘முன்பின் தெரியாத நபர்களுடன் ஏற்படும் இதுபோன்ற தொடர்பை உடனே துண்டித்து விடுங்கள். பெண்களை மயக்கி பேசும் ஆண்களை நம்பி இப்படி வெளியூர்களுக்கு செல்வதால் சமூக விரோத கும்பலிடம் சிக்கி சீரழிவது போன்ற வேறுவிதமான அசம்பாவிதங்களும் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே பெண்கள் இதுபோன்ற ஆசாமிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டில் உள்ள மற்றவர்களும் தங்களது வீட்டு பெண் போனில் யாரிடம் என்ன பேசுகிறார்? என்பதை கண்காணித்து தெரிந்து கொண்டால் இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கலாம். அதேநேரத்தில் பெண்களின் தேவை அறிந்து வீட்டில் உள்ளவர்கள் நடந்து கொண்டாலும் இதை தவிர்க்கலாம்’ என்று தெரிவித்தார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum