மிசா சட்டத்தையே பார்த்தவர்கள் நாங்கள்
Page 1 of 1
மிசா சட்டத்தையே பார்த்தவர்கள் நாங்கள்
‘‘மிசா சட்டத்தையே பார்த்தவர்கள் நாங்கள். சி.பி.ஐ. விசாரணைக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்’’ என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
செயல் வீரர்கள் கூட்டம்
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நல்லூர் அண்ணா திடலில் நடந்தது. கூட்டத்துக்கு காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, மீ.அ.வைத்தியலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் சுதர்சனம் வரவேற்றார்.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–
சி.பி.ஐ.க்கு அஞ்ச மாட்டோம்
மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்து விலகிய உடன் என் வீட்டிற்கு சி.பி.ஐ. விசாரணை என்ற பெயரில் மிரட்டுகிறார்கள். இதற்கெல்லாம் அஞ்சி, நடுங்கி வீட்டீற்குள்ளேயே முடங்கி விடமாட்டோம். அப்போது பிரதமராக ஆட்சியில் இருந்த இந்திரா காந்தி ஏவி விட்ட மிசா சட்டத்தையே கண்டு அஞ்சாதவர்கள் நாங்கள். பணங்காட்டு நரி, இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது. சி.பி.ஐ. என்றால் பயந்துவிட மாட்டோம். எதையும் சட்டரீதியாக சந்திக்க தயாராக உள்ளோம்.ஈழத் தமிழர்கள் பிரச்சினைகளுக்காக கருணாநிதி தொடர்ந்து போராடி வருகிறார். இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து விசாரணை, சர்வதேச நீதி விசாரணை போன்ற பல அம்சங்கள் கொண்ட தீர்மானத்தை ஐ.நா. சபையில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கோரினோம். ஆனால் மத்திய அரசு இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. தொடர்ந்து இதற்கு மேலும் கூட்டணியில் இருந்தால் அது மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும் என்பதால் கூட்டணியில் இருந்து விலகினோம். தமிழகத்தில் தற்போது 18 முதல் 20 மணி நேரம் மின் தட்டுப்பாடு உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
நலத்திட்ட உதவிகள்
அதை தொடர்ந்து ஆயிரம் பேருக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான சலவை பெட்டி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மிசா சட்டத்தையே பார்த்தவர்கள் நாங்கள் ‘சி.பி.ஐ
» மிசா மிசா மிசா
» உணர்ச்சியே இல்லாத மரக்கட்டை சன்னி லியோன்.. ‘ஜிஸ்ம்’ பார்த்தவர்கள் வெறுப்பு!
» நாங்கள் வரலாறு படைத்தோம்
» நாங்கள் நல்ல பிள்ளைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum