அக்சயுடன் இணை சேர்கிறார் அசின்
Page 1 of 1
அக்சயுடன் இணை சேர்கிறார் அசின்
கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து இப்போது பாலிவுட் நட்சத்திர வரிசையில் அமர்ந்திருக்கும் அசின் தற்போது ஹவுஸ்புல் 2 படத்தில் அக்சய் குமாருடன் இணை சேர உள்ளார்.
ஏற்கனவே அஜய் தேவ்கான், அமீர், சல்மான் கானுடன் ஜோடியாக நடித்துவிட்ட அசின், தற்போது அக்சயுடன் இணை சேர்வது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அக்சய் குறித்து அசின் கூறுகையில், அக்சயின் சொந்த வாழ்க்கையாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும் அவர் கடைபிடித்து வரும் ஒழுக்கம் என்னை பிரம்மிக்க வைத்துள்ளது. பலருக்கும் ஒரு ரோல் மாடலாக இருக்கும் அக்சய் கடின உழைப்பாளியும் கூட. தற்போது அவருடன் நடிப்பது குறித்து மகிழ்ச்சியாக உள்ளேன் என்று கூறினார்.
3 ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்தியில் அமீர்கானுடன் கஜினி படத்தில் அறிமுகமான அசின், தொடர்ந்து ஒரு சில படங்களிலேயே நடிக்க ஒப்பந்தமானார். இது குறித்து அவரிடம் கேட்டால், எத்தனை படங்களில் நடித்தேன் என்பது முக்கியமில்லை. அது எப்படிப்பட்ட படங்கள் அதில் எனது கதாபாத்திரம் என்ன என்பதுதான் மிகவும் முக்கியம். நல்ல படங்களாக தேர்வு செய்து நடித்ததுதான் குறைவான படங்களில் நடித்திருப்பதற்குக் காரணம் என்கிறார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அஜித்துடன் ஜோடி சேர்கிறார் அனுஷ்கா
» தனுஷூடன் ஜோடி சேர்கிறார் அமலாபால்
» ஜெயம் பட வில்லனுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா
» கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்!
» அங்க கூப்பிட்டாங்க இங்க கூப்பிட்டாங்க அசின் பந்தா – தமிழ் சினிமாவுக்கே தண்ணி காட்டும் அசின்
» தனுஷூடன் ஜோடி சேர்கிறார் அமலாபால்
» ஜெயம் பட வில்லனுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா
» கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்!
» அங்க கூப்பிட்டாங்க இங்க கூப்பிட்டாங்க அசின் பந்தா – தமிழ் சினிமாவுக்கே தண்ணி காட்டும் அசின்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum