சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தனித்தே ஆட்சி அமைப்போம் எடியூரப்பா பேச்சு
Page 1 of 1

எந்த கட்சியுடனும் கூட்டணி இன்றி தனித்து போட்டியிட்டு ஆட்சி அமைப்பதாக கர்நாடக ஜனதா கட்சியின் தலைவர் எடியூரப்பா பேசினார்.
தொண்டர்கள் கூட்டம்
கர்நாடக ஜனதா கட்சியின் தொண்டர்கள் கூட்டம் கொள்ளேகாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சியின் தலைவர் எடியூரப்பா பேசியதாவது:–வருகிற சட்ட சபை தேர்தலில் போட்டியிடும் கர்நாடக ஜனதா கட்சி வேட்பாளர்களின் 2–ம் பட்டியல் வருகிற 2–ம் தேதி அறிவிக்கப்படும். தற்போது 69 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
தீவிர பிரசாரம்
கட்சியின் 2–வது வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பின் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளேன். பா.ஜனதா கட்சியின் மதிப்பு தினமும் குறைந்து வருகிறது. கர்நாடக ஜனதா கட்சியின் பெயர் வளர்ச்சி பெற்று வருகிறது. இதற்கு மக்கள் தரும் ஆதரவே சாட்சியாக உள்ளது.வருகிற சட்டசபை தேர்தலில் மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளிலும் நாங்கள் பேட்டியிட முடிவு செய்து உள்ளோம். தேர்தலில் யாருடனும் நாங்கள் கூட்டணி சேரவில்லை. காங்கிரஸ் கட்சி மட்டுமே எங்களுக்கு போட்டியாக நாங்கள் கருதுகிறோம்.
வி.சேமண்ணாவிற்கு வாய்ப்பு
சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு மந்திரி வி.சோமண்ணா கர்நாடக ஜனதா கட்சிக்கு வந்தால் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவோம். சட்டசபை தேர்தலில் எக்காரணம் கொண்டும் தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வராது. எங்களின் ஆதரவுடன் தான் ஆட்சி அமையும்.அனந்தகுமார் மற்றும் ஈசுவரப்பாவால் தற்போது பா.ஜனதா கட்சி தண்ணீரில் மூழ்கும் படகு போல் உள்ளது. தற்போது மூழ்கி கொண்டு இருக்கும் படகிற்கு கேப்டனாக பிரகலாத் ஜோஷி உள்ளார். இதனால் படகு மேலும் மூழ்கும்.
ரூ.2 லட்சம் கோடியில் பட்ஜெட்
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கபினி நீர்பாசன 2–ம்கட்ட பணிகளை ஆரம்பிப்பேன். மேலும் ரூ. 2 லட்சம் கோடியில் பட்ஜெட் தாக்கல் செய்வோம். கடந்த முறை ஆட்சியில இருந்த போது ரூ. 1 லட்சம் கோடி பட்ஜெட் தாக்கல் செய்தேன்.முன்னாள் பிரதமர் தேவேகவுடா காவிரி போராட்டத்தில் நான் பாதயாத்திரை சென்ற போது கேலி செய்தார். ஆனால் அவர் எம்.பி.களை அழைத்து கொண்டு பிரதமருடன் பேசவில்லை. இதன் மூலம் அவருக்கு விவசாயிகள் மீது உள்ள ஆர்வம் இல்லாதது தெரிகிறது.
பின்தங்கி உள்ளது
சதானந்த கவுடா மற்றும் ஜெகதீஷ்ஷெட்டர் அரசை கொன்று விட்டனர். அரசுக்கு உயிர் இருந்தால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்று கொள்ளப்பட்டு இருக்கும். வளர்ச்சி அடையும் மாநிலங்களில் தற்போது கர்நாடகா பின்தங்கி 12–வது இடத்தில் உள்ளது.சித்தராமையா நிதி மந்திரியாக இருந்த போது ரூ. 25 ஆயிரம் கோடி பட்ஜெட் தாக்கல் செய்து இருந்தார். ஆனால் நான் ஆட்சியில் இருந்த போது ரூ. 86 ஆயிரம் கோடி பட்ஜெட் தாக்கல் செய்தேன்.
காகிநாலனா வளர்ச்சி
சித்தராமையா தன்னுடைய குரும்பா பிரிவினரின் வளர்ச்சியில் அக்கறை காட்டவில்லை. ஆனால் நான் முதல்–மந்திரியாக இருந்த போது காகிநாலா பகுதியை வளர்ச்சி அடைய பல நலத்திட்டங்கள் செய்து உள்ளேன். ஜெகதீஷ் ஷெட்டரை நான் முதல்–மந்திரியாக ஆக்கினேன்.ஆனால் அவர் எனக்கு துரோகம் செய்து விட்டார். தற்போது பொதுமக்களை மட்டுமே நம்பி உள்ளேன். பாராளுமன்ற தேர்தலில் கர்நாடக ஜனதா கட்சியை 19 தொகுதியில் வெற்றி பெற செய்தால் பிரதமரை நம் மாநிலத்தை தேடி வரச்செய்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» புதிய சட்டசபை வளாகத்தை மருத்துவமனையாக மாற்ற இடைக்காலத் தடை
» ஆட்சி மாற்றத்துக்கு விஜய்தான் காரணம்! சீமான் பரபரப்பு பேச்சு!!
» கடைசி டெஸ்டிலும் வெற்றி பெற்று புதிய சரித்திரம் படைத்தது, இந்தியா 3–வது நாளிலேயே பணிந்தது ஆஸ்திரேலியா

» பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum