தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புயலிலே ஒரு தோணி

Go down

புயலிலே ஒரு தோணி Empty புயலிலே ஒரு தோணி

Post  meenu Tue Mar 26, 2013 2:48 pm

நற்றிணை பதிப்பகம் "மகத்தான நாவல் வரிசை" என்ற தலைப்புடன், சிறந்த நாவல்களை பதிப்பிக்க தொடங்கியுள்ளது. முதலாவதாக வெளி வந்துள்ள புத்தகத்தில் ப. சிங்காரம் எழுதிய "கடலுக்கு அப்பால்", "புயலிலே ஒரு தோணி" ஆகிய நாவல்கள் அடங்கியுள்ளன. மறைந்த ப. சிங்காரம், தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர். அவர், தமது வாழ்நாளில் எழுதியவை, இந்த இரண்டே நாவல்கள்தான். இவற்றின் பெருமையையும், சிறப்பையும் இப்போதுதான் தமிழ் இலக்கிய உலகம் அடையாளம் கண்டு கொண்டுள்ளது.

"தமிழில் இதுவரை வெளி வந்துள்ளவற்றில், 10 சிறந்த நாவல்களை தேர்ந்தெடுத்தால், அதில் புயலில் ஒரு தோணிக்கு நிச்சயம் இடம் உண்டு" என்று புகழ் பெற்ற விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதற்கு காரணம், பெரும்பாலான எழுத்தாளர்கள் எழுதுவது வெறும் கற்பனை. ப. சிங்காரம் யுத்த காலத்தில் இந்தோனேசியாவிலும், பர்மாவிலும் இருந்து யுத்தத்தின் கொடூரத்தை நேரில் கண்டவர். எனவே, அவர் படைத்த கதாபாத்திரங்கள் உயிரோவியங்களாக திகழ்கிறார்கள். இரு நாவல்களும் மேல் நாட்டு நாவல்களுக்கு இணையாக அமைந்துள்ளன.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum