தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கும்பாபிஷேக மகத்துவம்

Go down

கும்பாபிஷேக மகத்துவம் Empty கும்பாபிஷேக மகத்துவம்

Post  meenu Fri Jan 18, 2013 1:46 pm

கும்பாபிஷேகம் காண்பது என்பது வாழ்நாளில் கிடைத்தற்கு அரிய ஒரு வாய்ப்பாகும். கும்பாபிஷேகத்தை நேரில் கண்டு, கடவுளை வணங்குபவர்களுக்குத் திருவருள் நிரம்பத்துணை செய்யும். ஒருவர் நியாயமாகக் கணக்கு எழுதி, நியாயமாக செலவழித்து நியாயமாக வரி கட்டி வியாபாரம் பண்ணினார்.

அவருக்கு மாதம் ஆயிரத்து நானூறு ரூபாய் வருமானம் கிடைத்தது. பன்னிரண்டு ஆண்டுகள் வியாபாரம் பண்ணினார். இரண்டு லட்சத்து ஓராயிரத்து அறுநூறு ரூபாய் கிடைத்தது. இன்னொருத்தர் கிணறு வெட்டினார். ஓர் அண்டா கிடைத்தது. எடுத்துப் பார்த்தால் தங்க டாலர்கள். கொண்டு போய் விற்றார்.

டாலர் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய். இருநூறு டாலருக்கு இரண்டு லட்ச ரூபாய் வந்தது. பன்னிரண்டு ஆண்டுக்காலம் இரவு பகலாகப் பாடுபட்டவருக்கு இரண்டு லட்ச ரூபாய் சேர்ந்தது. பாடுபடாமலே, நெற்றித் தண்ணீர் நிலத்தில் விழாமலே கிணறு வெட்டியவருக்கு இரண்டு லட்ச ரூபாய் வந்தது.

அதுபோல், பன்னிரண்டு ஆண்டுகள் ஆலயத்திற்குச் சென்று இறைவனை மன, மொழி, மெய்களினாலே வழிபட்டவருக்கு என்ன என்ன அருள் வருமோ, அத்தனை அருளும் கும்பாபிஷேகத்தைச் சேவித்த ஒரு விநாடியில் வரும்.

புதையல் எடுத்துத் தனவந்தன் ஆவதுபோல், கும்பாபிஷேகம் சேவித்தவருக்குத் திருவருள் கைகூடி வரும். ஆகவே, கும்பாபிஷேகத்தைச் சேவிப்பது மிக மிக இன்றியமையாதது. எல்லாருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காது. மயிலாப்பூரில் சிவநேசஞ் செட்டியார் என்றொரு தனவந்தர் வாழ்ந்து வந்தார்.

அவருடைய மகள் பூம்பாவை ஏழு வயதிலே பாம்பு கடித்து மரணம் அடைந்தாள். அவளது உடம்பைத் தகனம் செய்து, சாம்பலைப் புதிய மண் கலசத்திலே வைத்துப் பார்த்துப் பார்த்து அழுத வண்ணம் இருந்தார். ஒருநாள் மயிலாப்பூருக்கு திருஞானசம்பந்த சுவாமிகள் வந்தார்.

"பெருமானே வருக, வருக, வருக'' என்று சிவநேசஞ் செட்டியார் ஞானசம்பந்தருக்கு வரவேற்பு கொடுத்து கோவிலுக்குள் அழைத்துப் போனார். கற்பகவல்லித் தாயாரையும் கபாலீஸ்வரரையும் ஞானசம்பந்தர் சேவித்தார்.

கோவிலுக்கு வெளியே அவர் வந்தவுடன் எலும்பும் சாம்பலும் அடங்கிய மண் கலசத்தை வைத்து அழுது தொழுது சிவநேசஞ்செட்டியார் உருகி நின்றார். "செட்டியார் இது என்ன?'' என்று ஞானசம்பந்தர் கேட்டார். அதற்குச் சிவநேசர், "சுவாமி, அடியேனுக்குக் குழந்தை இல்லை.

நீண்ட காலம் தானம், தருமம், தவம் செய்தேன். ஆண்டவன் அருளினாலே, பெண் குழந்தை பிறந்தது. பூம்பாவை என்று பெயர் வைத்தேன். லட்சுமியைப் போலிருக்கும் என் மகளை உங்களுக்குத் தருவதாகப் பிரகடனம் செய்தேன். தாங்கள் தீண்டவில்லை. பாம்பு தீண்டி மாண்டு விட்டாள்.

சுவாமி, நான் கொடுத்து வைக்காத பாவி. தேவரீருக்குத் தருவதாக நான் நிச்சயித்திருந்தேன். அதனாலே இந்த எலும்பும், சாம்பலும் தங்களது உடைமை. உடைமையை உடையவரிடத்திலே ஒப்புவித்தேன்'' என்று கூறி அழுதார். அப்போது திருஞான சம்பந்தர் சொன்னார்,

"செட்டியார் உங்கள் குழந்தை பிழைக்கும். இந்த உடம்புதானே அழிந்தது.

ஆத்மா அழியாதது அல்லவா?''

என்று கூறினார்.

பின்னர், சாம்பல் நிறைந்த மண் கலசத்தைப் பார்த்து,

"அம்மா பூம்பாவை, மண்ணுலகத்திலே பிறந்தவர்கள் பெறுகின்ற பயன் இரண்டு உண்டு. இந்த இரண்டும் உண்மையானால் அம்மா நீ பிழைக்க வேண்டும் என்றார். பின்னர், அம்மா பூம்பாவை, உன் அப்பா ஆயிரமாயிரம் பேருக்கு அன்னதானம் பண்ணுவாரே, அதைப் பார்க்காமல் போய் விட்டனையே என்றார்.

ஆனால் இதை கேட்டு பூம்பாவை உயிர்த்தெழந்து வரவில்லை.

அப்போது திருஞானசம்பந்தர்,

"அம்மா பூம்பாவை, உன் அப்பா மகா கும்பாபிஷேகம் செய்யப் போகின்றார். ஆயிரமாயிரம் ஆதி சைவப்பெருமக்கள் வந்து அக்னி வளர்த்துச் செய்யப் போகின்ற அந்த மகா கும்பாபிஷேகம் பார்க்காமல் போய் விட்டாயே அம்மா என்றார்.

கும்பாபிஷேகம் என்று சொன்னவுடனே, குடம் வெடித்துப் பன்னிரண்டு வயது பெண் வெளியே வந்தாள். பூம்பாவை மரணம் அடைந்தபோது ஏழு ஆண்டு. இப்போது குடத்திலிருந்து வெளியே வரும்போது பன்னிரண்டாண்டு.

எதிர்க்கட்சிக்காரர்கள் எல்லாரும் `ஆ' என்றனர். மூக்கின்மேல் விரலை வைத்தனர். எலும்பைப் பெண்ணாக்குகிற ஆற்றல் அந்தக் கும்பாபிஷேக சப்தத்திற்கே உண்டு. நம்முடைய பழைய அரசர்கள் தங்களது அரண்மனையைப் பெரிதாகக் கட்டாமல் கோவிலை பெரிதாகக் கட்டினார்கள். அரண்மனை காவலோடு கூடியது.

கோவில் மனை அருளோடு கூடியது. இன்றைக்கு இராஜராஜ சோழனுடைய அரண்மனை இல்லை. அவன் கட்டி வைத்த பெரிய கோவில் இருக்கிறது. எனவே, நம்மால் முடிந்த அளவுக்கு ஆலயத் திருப்பணிகள் செய்ய வேண்டும்.

மஞ்சம் புல்லினால் கோயில் கட்டினால் கோடி வருடமும்,
மண்ணால் கோயில் கட்டினால் பத்து கோடி வருடமும்,
செங்கல்லால் கோயில் கட்டினால் நூறு கோடி வருடமும்

கைலாசத்திலிருக்கலாம்.

ஆனால், கருங்கல்லினால் கோயில் கட்டினவர்கள் கைலாசத்தைவிட்டு அகலவே மாட்டார்கள். பெருமானுக்குத் திருப்பணி செய்தால், அது ஆயிரம் ஆண்டுகள் இருக்கும். லட்சம் லட்சம் பேர்கள் வழிபடுவார்கள். இன்றைக்குத் திருத்தணி, திருச்செந்தூர், பழனி முதலிய தலங்களுக்கு எத்தனையோ லட்சம் பேர் வந்து வழிபட்டு நலன் பெறுகின்றார்கள்.

அங்கே சென்று நலம் பெற்றவர்கள் எல்லாம் மறுபடியும் செல்கின்றார்கள். முருகா முருகா முருகா முருகா முருகா முருகா என்று எம்பெருமான் நாமத்தை உள்ளம் உருகிக் கூற வேண்டும். அந்த முருக நாமத்தைச் சொல்லி அந்தப் பெருமானை வழிபடுகிறார்கள் பக்த கோடிகள்.

அப்படி அடியார்கள் வழிபடுவதற்கு நிலைக்களமாக இருப்பது ஆலயம். பத்ராசலம் என்னும் தலத்தைக் கோபண்ணா திருப்பணி செய்து அழியாத புகழையும், புண்ணியத்தையும் பெற்றார்.

பாண்டி நாட்டு முதல்-அமைச்சராயிருந்த மாணிக்கவாசகர் திருப்பெருந்துரையிலே ஆலயத் திருப்பணி செய்தார். அப்படியே பாண்டியரும் சோழரும் பல்லவரும் எத்தனை எத்தனையோ ஆலயத்தைக் கல்லினாலே செய்தார்கள்.

அப்படி இறைவனை ஆலயத்திலே வைத்து வழிபடுவதினாலே இகம், பரம், வீடு என்று மும்மை நலன்களும் நமக்கு உண்டா கும். ஆலய வழிபாடு இன்றியமையாதது. அது கலைகளுக்கெல்லாம் உறைவிடமானது, நம்முடைய தெய்வீகமான சக்தியை வெளிப்படுத்துவது கலைச்சின்னங்கள் கோவில்களாகும்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டுமென்பார்கள். அப்படி கும்பாபிஷேகம் செய்வதினாலே அந்த மந்திர சக்தி கூடுதலாக அமையும். பல காலம் கும்பாபிஷேகம் செய்யவில்லையானால் அந்தச் சக்தி தல விருட்சத்துக்குப் போகும்.

இன்னும் கொஞ்ச காலம் கழிந்தால் தலவிருட்சத்திலிருந்து பராகாசம் அடையும். அப்போது அந்த மூர்த்தி இடத்தே இருக்கிற ஆற்றல் பரவெளியில் கலந்து விடும். அதற்காகத்தான் மகான்கள் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது குறைந்தது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது மகா கும்பாபிஷேகம் அவசியமாகச் செய்வார்கள்.

ஆண்டவன் மந்திர யந்திர வடிவாக இருக்கின்றான். அதனாலே, அந்த மந்திர யந்திர வடிவத்தைச் சுவாமிக்கு அடியிலே மாத்ருகா மந்திரங்களை எல்லாம் எழுதி வைப்பர்.

அக்ஷர லக்ஷ ஜபத்தர்க் ரமத்திடு
சக்ர தலத்தி திரியக்ஷி சடக்ஷரி

என்று அருணகிரியார் பாடுகின்றார். அந்த மகான்கள் அட்சர லக்ஷங்களை எழுதி ஜபங்களை ஜபிப்பார்கள். அதனாலே அதனுடைய ஆற்றல் அதிகப்படுகிறது. அந்தக் காலத்தில் இருந்த அரசர்கள் தானும் தன் மனைவி யாரும் அணிகலன்களை எல்லாம் ஆண்டவனுக்குச் சாத்தி அழகு பார்த்தார்கள்.

கொல்லூர் மூகாம்பிகைக்கு நளச்சக்ரவர்த்தி கொடுத்த பச்சை இன்றும் இருக்கின்றது. நளச்சக்ரவர்த்தி எந்தக் காலத்தில் வாழ்ந்தவரோ. அவர் இல்லை. அவர் கொடுத்த பச்சை இன்றைக்கும் மூகாம்பிகை கோவிலிலே இருக்கிறது. எங்கே ஆலயங்கள் சிறப்பாக இருக்குமோ அங்கே குடிகள் உயரும்.

கோவில் குன்றினால் குடிகள் குன்றிப் போவார்கள். ஆலயங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆலயத்திலே சென்று தூய்மைக்கு மாறான காரியங்களைச் செய்யக்கூடாது. ஆலயத்திலே சென்றால் கொடி மரத்தின் அடியில் விழுந்து கும்பிட வேண்டும். உள்ளுக்குள் போய் விழுந்து கும்பிடக் கூடாது.

ஆண்டவனைத் தவிர வேறு பொருள்களை நோக்கக் கூடாது. அங்கே இறைவனுடைய அருள்சக்தி சூட்சுமமாக உலாவிக் கொண்டிருக்கும். இறைவன் ஒருவன் தான் பல்வேறு வடிவங்களாக நமக்கு அருள் புரிகின்றான்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum