தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடைக்கண் பார்வையால் கவலை விரட்டும் கன்னி தெய்வம்

Go down

கடைக்கண் பார்வையால் கவலை விரட்டும் கன்னி தெய்வம் Empty கடைக்கண் பார்வையால் கவலை விரட்டும் கன்னி தெய்வம்

Post  amma Fri Jan 11, 2013 1:12 pm

கொங்கு ஏழு சிவத்தலங்களில் ஒன்றாகிய திருமுருகன்பூண்டியில் சேரனால்
கட்டப்பட்டவை, திருமுருகநாதர் திருக்கோயிலும் நீலகண்டியம்மன் கோயி லும்.
சேரனின் முன் வம்சத்தவர் ஆலயங்களை உருவாக்கும்போதே, சேரனிடத்தில் நாகதேவக்
கன்னி தனக்கொரு கோட்டையையும் கோயிலையும் கட்டி வைக்குமாறு சொன்னது.
அதன்பிறகு கோட்டையைக் கட்டி முடித்து அதன் கிழக்கு வாசலில் நாகதேவக்
கன்னிக்கு கோயிலையும் சேரன் கட்டி வைத்தான்.
இந்த திருக்கோயிலும்
தெய்வமும் பெயர் மாற்றம் பெற்று நீலகண்டியம்மன் என்றானது. கருணை மிக்க
மாதேவியின் பேரழகு வடிவமும் துவார பால கிகளின் சிலாரூபங்களும் ஈடு
இணையற்றவை. சிற்ப நுட்பங்கள் தெரியாதவர்கள்கூட இச்சிலைகளை கண்டு
மயங்கித்தான் போவார்கள்.

அம்மனின் எட்டு திருக்கரங்களிலும்
போர்க்கருவிகள் மற்றும் மணி, கபாலம், விஸ்மய முத்திரை தாங்கி இருக்க, மரண
பயத்துடன் காலடியில் வீழ்ந்திருக்கும் அசுரன் மீது வலது காலைத்
தொங்கவிட்டு, பாதம் அழுத்தமாகப் பதிந்திருக்க, இடது காலை மடித்து பீடத்தின்
மீது வைத்து சம்ஹரிக்க தயாரான நிலையில் காட்சி அளிக்கிறாள். அம்மனின்
திருமுகத்தில் உக்கிரம் பொங்கி வழிகிறது. வீராவேசத்தில் சடை விரிந்து
பரந்து கிடக்க, மார்பில் தவழும் மண்டையோட்டு மாலை மூச் சுக்காற்றின் அனலால்
ஆடி அசைய, வலது செவியின் துவாரத்தில் ஓர் அசுரன் தலை கீழாகத் தொங்க
விடப்பட்டு காதணியாக மாறியிருக்கிறான். சிர சின் மேல் இரு நாகங்களையும்
மண்டையோடுகளையும் தாங்கியிருக்கிறாள் அன்னை.

இத்துடன் நில்லாமல்
ஒரே அழகுடைய அம்மனின் துவார பால கிகளாக இருவரை உருவாக்கியுள்ள சிற்பியின்
ரசனை மிக உயரியது. பொதுவாக துவார பாலகர், பாலகியர் விசித்திர உடலமைப்புடன்
கோரைப் பற்கள் வெளியே நீட்டிக் கொண்டிருக்க, அச்சம் தரும் வகையில்
இருப்பார்கள். ஆனால், இங்கோ வைத்த கண் வாங்கா மல் அவர்களையே பார்த்து
ரசிக்க முடிகிறது. சேரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்ட இந்த
அம்மனின் வரலாறு அவிநாசி தலத்தோடும் தொடர்புடையது. அவிநாசியப்பர்
திருக்கோயில் அம்மனின் சந்நதி முன்பு இடப்புற சுவரின் ஓரமாக நாகதேவக்
கன்னி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளாள். இந்த மண்டபத்தின் முன்புற தூணிலும்
நாக தேவக் கன்னி வடிக்கப்பட்டிருக்கிறாள்.

பாம்பு உடல் இடுப்புக்கு
கீழ்வரை அமைந்திருக்க, மேலே பெண் உருவோடு தோன்றிய இந்த நாகதேவக் கன்
னிக்கும் இத்தலத்திற்குமே நெருங்கிய தொடர்புண்டு. ஒருமுறை ஆதிசேஷனின்
மகளாகிய இந்த நாகக் கன்னிகை பூமியில் தவம் செய்ய விரும்புவதாக தந்தையிடம்
தெரிவித்தாள். அவளின் விருப்பத்தை பூர்த்தி செய்ய எண்ணிய ஆதிசேஷன் அவளை
தக்க துணையுடன் பிலத் துவாரத்தின் வழியாக அவிநாசி காசி கங்கா
கிணற்றுக்குள் அழைத்து வந்து, மேலே பூமிக்கும் அனுப்பி வைத்தான். பல
நூற்றாண்டுகள் தவம் செய்து ஆதிசேஷனின் புதல்வி அவிநாசியப்பர் மற்றும்
அம்மையின் கருணைக்கு பாத்திரமானாள். அவள் தவத்தை மெச்சி அரித்துவசன் என்ற
மானிடனுக்கு அவளை மணம் செய்வித்தனர். பிறகு இருவரும் பாதாள லோகம் சென்று
வாழ்ந்து வந்தனர். ஓர் இரவு எப்போது அவிநாசியப்பரையும் அம்மையையும்
தரிசிப்போம் என்று எண்ணி ஏங்கியபடி துயில் கொண்டனர்.

துயில்
கலைந்தபோது இருவரும் அவிநாசியப்பர் திருக்கோயில் முன் இருப்பது கண்டு
பரவசமடைந்தார்கள். அதன்பின் இத்திருக்கோயிலுக்கு பல்வேறு திருப்
பணிகள்
செய்து, நாக ரத்தினக் கற்கள் பதித்த திருவாபரணங்கள் பூட்டி அழகு
பார்த்தனர். நாகதேவக் கன்னியின் விருப்பப்படி சேரன் அவளுக்கு ஓர் கோட்டை
கட்டி அதில் கோயிலும் சமைத்தான். தலையில் இரண்டு நாகங்களோடு அம்ம னின்
திருமேனிகள் காண அரிதானது. எனவே, நீலகண்டி அம்மன் என்று இன்று பெயர்
மாற்றம் பெற்றிருப்பினும் அவிநாசி தல இறைவன், இறைவி யின் பெரும் கருணைக்கு
உரியவள் இவளே என்றும் கூறலாம். இந்த நாகதேவக் கன்னிகையே தூணிலும் பெருங்
கருணையம்மன் சந்நதியின் முன் மண்டப சுவரிலும் தன்னை வெளிப்படுத்திக்
கொண்டிருக்கிறாள் எனலாம்.

நாகதோஷம் உள்ளவர்கள் இந்த அம்மனின்
திருகடைக்கண் பார்வையால் தீர்வு காண்கிறார்கள். இறைவன், இறைவியாலேயே மணம்
செய்து கொடுக்கப்பட்ட இவளுக்கு மாலை சாற்றி வழிபட்டால் தாமதிக்கும்
திருமணங்கள் வெகு விரைவில் நடைபெறும். அம்மனின் சிங்க வாகனத்தைத் தொட்டு
வணங்கினால் நினைத்தது நடக்கும். ஆனால் ஈசனின் முன்னிருக்கும் நந்தியை தொடவே
கூடாது என்ற ஐதீகமும் நிலவுகின்றது. திருமுருகன்பூண்டிக்கு செல்பவர்கள்
நீலகண்டி அம்மனையும் தரிசித்து வருவதுடன் சிலைகளை செதுக்கிய சிற்பியையும்
மானசீகமாக கைகுலுக்கி பாராட்டுத் தெரிவிக்கலாம். திருப்பூர்-கோவை சாலையில்
8வது கி.மீட்டரிலும், கோவையிலிருந்து 45 கி.மீ. தொலைவிலும் உள்ளது
திருமுருகன்பூண்டி.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» கடைக்கண் பார்வையால் கவலை விரட்டும் கன்னி தெய்வம்
» இனப் பெருக்கத்தில் வித்தியாசமான ஒரு கன்னி இனப் பெருக்கமும் உண்டு. அதாவது சோவியத் நாட்டில் உள்ள ஒருவகை பல்லி, கன்னி இனப் பெருக்க முறையில் பெண் பல்லி இனத்தை மட்டுமே உருவாக்குகின்றன. இதற்கு நேர்மாறான இன்னொரு அதிசயமான உதாரணம் என்னவென்றால் தேனீக்கள், குளவிகள்
» மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை
» மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை
» மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum