கண்ணீரில் மிதக்கும் கதைகள்
Page 1 of 1
கண்ணீரில் மிதக்கும் கதைகள்
வரலாற்று நூல்களையும், ஆராய்ச்சி நூல்களையும் எழுதி வரும் தமிழறிஞர் டாக்டர் க.ப. அறவாணன், அவ்வப்போது சிறுகதைகளும் எழுதி வருகிறார். அவருடைய சிறுகதைகள், வெறும் பொழுதுபோக்குக்கான கதைகள் அல்ல. நீதியையும், தர்மத்தையும் போதிப்பவை. அவருடைய புதிய சிறுகதை தொகுதி "கண்ணீரில் மிதக்கும் கதைகள்.'' இதில் மொத்தம் 27 கதைகள் உள்ளன. தலைப்பை பார்த்தால், எல்லாமே சோகமயமான கதைகளாக இருக்குமோ என்று நினைக்க தோன்றும். அப்படி அல்ல. சோக கதைகளுக்கு மட்டுமின்றி, உணர்ச்சி மயமான கதைகளுக்கும் நெஞ்சை நெகிழ வைத்து கண்ணீரை வரவழைக்கும் சக்தி உண்டு. அத்தகைய கதைகள்தான் இதில் இருப்பவை. உயிரும், உணர்ச்சியும் உடைய கதாபாத்திரங்களை நம் முன் நடமாடவிட்டு, கதையுடன் நம்மை ஒன்ற செய்வதில் ஆசிரியர் முழு வெற்றி பெற்றுள்ளார். இக்கதைகளை `நல்ல கதைகள்', `சிறந்த கதைகள்' என்று கூறுவதைவிட, `உயர்ந்த கதைகள்' என்று கூறுவது முற்றிலும் பொருந்தும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கண்ணீரில் மிதக்கும் கதைகள்
» கண்ணீரில் தத்தளிக்கும் மீனவர்களை கரை சேர்க்க…! – விஜய் அறிக்கை
» சுழலில் மிதக்கும் தீபங்கள்
» நீரில் மிதக்கும் நிலா
» கடலில் மிதக்கும் கவிதைகள்
» கண்ணீரில் தத்தளிக்கும் மீனவர்களை கரை சேர்க்க…! – விஜய் அறிக்கை
» சுழலில் மிதக்கும் தீபங்கள்
» நீரில் மிதக்கும் நிலா
» கடலில் மிதக்கும் கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum