தமிழில் "ஸ்ரீராம ராஜ்ஜியம்'
Page 1 of 1
தமிழில் "ஸ்ரீராம ராஜ்ஜியம்'
நயன்தாரா, பாலகிருஷ்ணா நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற "ஸ்ரீராம ராஜ்ஜியம்' தெலுங்குப் படம், அதே தலைப்பில் தமிழில் மொழிமாற்றத்துடன் வெளியாகிறது.
பாபு இயக்கியுள்ள இந்தப் படத்தை பியூச்சர் பிலிம்ஸ் சார்பில் ஜே. பனீந்திரகுமார் தயாரித்துள்ளார். படத்தைப் பற்றி தயாரிப்பாளரிடம் கேட்டபோது...
""வன வாசம் முடிந்தவுடன் பட்டாபிஷேகம் சூட்டிக்கொள்ளும் ராமபிரான், மக்களின் கருத்துக்கேற்ப சீதையைப் பிரிகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சீதை காட்டுக்குச் சென்று லவன், குசன் என்ற இரண்டு குழந்தைகளைப் பெற்று தனியாளாக சந்தித்த சோதனைகள் ஏராளம். அந்தப் பின்னணியில்தான் "ஸ்ரீராம ராஜ்ஜியம்' படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
ராமர் என்றாலே என்.டி.ராமராவ்தான் என்று ஆந்திர மக்கள் கூறும் அளவுக்கு அந்த வேடத்துக்குப் பொருத்தமாகக் கருதப்பட்டவர் என்.டி.ஆர். இப்போது அந்த ராமர் கிரீடத்தை அவருடைய மகன் பாலகிருஷ்ணா சூட்டியிருக்கிறார். சீதையாக நயன்தாரா நடித்துள்ளார். நாகேஸ்வரராவ் வால்மீகி வேடத்திலும் கே.ஆர்.விஜயா கோசலை வேடத்திலும் நடித்துள்ளனர்.புராண காலத்துப் படம் என்பதால் தூய தமிழில் வசனங்களைப் பேசி டப்பிங் செய்ய வேண்டியிருந்தது. தூய தமிழ் பேசுபவர்கள் கிடைக்காத காரணத்தாலேயே தமிழில் வெளியிடுவதற்கு கால தாமதமானது. பிறகு, ஒரு வழியாக அவர்களைத் தேடிப்பிடித்து பேச வைத்திருக்கிறோம். டப்பிங் பணிகளுக்கு மட்டும் 56 நாள்கள் எடுத்துக்கொண்டோம். பாலகிருஷ்ணாவுக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியமும், நயன்தாராவுக்கு சின்மயியும் டப்பிங் கொடுத்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். கவிஞர் பிறைசூடன் வசனத்தையும் பாடல்களையும் எழுதியுள்ளார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் பார்க்கும் வகையில் சிறப்பாக உருவாகியுள்ள "ஸ்ரீராம ராஜ்ஜியம்' ஏப்ரல் 13-ம் தேதி தமிழகமெங்கும் வெளியாகிறது'' என்றார் தயாரிப்பாளர் ஜே.பனீந்திரகுமார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நயன்தாராவின் கடைசிப் படம் ஸ்ரீராம ராஜ்ஜியம்
» ஸ்ரீராம ராஜ்ஜியம் பிளாப் – சோகத்தில் நயன்தாரா
» மறையாத `மாமியார் ராஜ்ஜியம்'
» சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம்
» ஸ்ரீராம ஜெயம்
» ஸ்ரீராம ராஜ்ஜியம் பிளாப் – சோகத்தில் நயன்தாரா
» மறையாத `மாமியார் ராஜ்ஜியம்'
» சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம்
» ஸ்ரீராம ஜெயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum