திருப்பு முனைகள்
Page 1 of 1
திருப்பு முனைகள்
சாதாரண குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் முதல் குடிமகனாக தேர்ந்து எடுக்கப்பட்டு, மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்று இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கும் டாக்டர். ஆ.ப.ஜெ.அப்துல்கலாம். ஏற்கனவே அக்னி சிறகுகள் என்ற அற்புதமான படைப்பை கொடுத்து புத்தக உலகில் ஒரு சாதனையை ஏற்படுத்தி இருக்கிறார். இப்போது, அவரது சிறகுகள் மேலும் விரிவடைந்து பறந்ததன் மூலம் உருவாகி இருக்கிறது, திருப்பு முனைகள் என்ற அக்னி சிறகுகள் இரண்டாம் பாகம் புத்தகம்.
ஜனாதிபதி பதவியின் கடைசி நாள் அனுபவத்துடன் தொடங்கும் இந்த புத்தக்த்தில், அவர் ஜனாதிபதியாக தேர்வு செய்ப்பட்டபோது நடந்தது என்ன? அவர் சந்தித்த 7 முக்கியமான திருப்பங்கள், இந்தியாவை வளமிக்க நாடாக உயர்த்த அவர் தெரிவிக்கும் 10 யோசனைகள், சகாய் 30 போர் விமானத்தில் அதிவேகத்துடன் பறந்த அனுபவம், எப்போதும் பரிசுப்பொருட்களை ஏன் ஏற்றுக்கொள்வது இல்லை என்பதற்கான காரணம், ஏவுகணை அனுபவங்கள், பீகார் சட்டசபை கலைக்கப்பட்டபோது உருவான பிரச்சினையால் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டது என்று ஏராளமான சுவையான தகவல்களை தருகிறார், டாக்டர் அப்துல்கலாம்.
நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட மாணவர்கள் உள்பட அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய நல்ல புத்தகம். சிவதர்ஷினியின் மொழிபெயர்ப்பு இயல்பாக இருக்கிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum