தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராஜ்கபூர் படங்களை பார்க்க தனுஷுக்கு அட்வைஸ்

Go down

ராஜ்கபூர் படங்களை பார்க்க தனுஷுக்கு அட்வைஸ் Empty ராஜ்கபூர் படங்களை பார்க்க தனுஷுக்கு அட்வைஸ்

Post  ishwarya Mon Mar 25, 2013 5:34 pm



நடிகர் தனுஷ் பாலிவுட் படமான ரஞ்சனா ரீமேக்கில் தமிழில் நடிக்க உள்ளார். இப்படத்தை இயக்கும் ஆனந்த், பாலிவுட் நடிகர் ராஜ்கபூரின் படங்களை பார்த்து நடிப்பு நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ளும்படி தனுஷிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதெப்படி, பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் கதாநாயகனாக ஏற்றுக் கொண்டுள்ள ஒரு நடிகரிடம், இப்படி நீங்கள் கூறலாம் என்று கேட்க ஆனந்திடம் சென்றோம். ஆனால் அவரோ மிகவும் சாவகாசமாக நம்மை வரவேற்று அமர வைத்தார்.

குடிக்க சில்லென்று என்ன வேண்டும் என்று கேட்டதுமே நாம் குளிர்ந்துவிட்டோம். அப்புறம் என்ன வந்த வேலையை செய்ய வேண்டாமா?

ஏன் அப்படி தனுஷிடம் நீங்கள் கூறினீர்கள்? என்று மிகவும் அமைதியான குரலில் கேட்டோம். அதற்கு அவர் கூறிய பதில், "தனுஷ் ஒரு சிறந்த நடிகர்தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் முதல் முறையாக பாலிவுட் பட ரீமேக்கில் நடிக்கப் போகிறார். அதற்காக அவரை ராஜ் கபூரின் ஸ்ரீ 420, அவாரா, மேரா நாம் ஜோக்கர் போன்ற படங்களைப் பார்த்து சில நடிப்பு நுணுக்கங்களை தெரிந்து கொள்ள ஆலோசனைதான் கூறியுள்ளேன்" என்கிறார்.

மேலும், "ரஞ்சனா படம் வாரணாசியில் வாழும் ஒரு இளைஞனின் கதை. இதில் தனுஷூக்கு ஒரு மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். இதனை சிறப்பாக நடிக்க ராஜ் கபூர் படங்கள் இவருக்கு உதவியாக இருக்கும் என்று நான் நினைத்தேன்" என்கிறார்.

நீங்க சொன்ன சரியாத்தான் இருக்கும் என்று சொல்லிவிடை பெற்றுக் கொண்டோம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum