தியாக தீபம் (மகாத்மா காந்தி கொலை வழக்கு)
Page 1 of 1
தியாக தீபம் (மகாத்மா காந்தி கொலை வழக்கு)
மகாத்மா காந்தியின் கொலை வழக்கு விசாரணையை “தியாக தீபம்’’ என்ற நூல் மூலம் அனைவரும் அறியும் வகையில், சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ச.மோகன் எழுதி உள்ளார். சட்ட மேதையான நூலாசிரியர், நாட்டுக்கு சாதனை மிக்க தீர்ப்புகளை வழங்கியதுடன், சிறந்த கவிஞராகவும், நாவலாசிரியராகவும், சிந்தனையாளராகவும், ஆற்றல் மிகு பேச்சாளராகவும் திகழ்பவர். இவர் எழுதிய இந்த நூலில், கொலையாளி பேசுவது, வக்கீல் வாதம், தீர்ப்பு, மேல்முறையீடு, இறுதித்தீர்ப்பு, தூக்கு மேடை உள்பட 30 தலைப்புகளில் காந்தியின் கொலை வழக்கு விசாரணைத் தகவல்கள் விரிவாக இடம் பெற்றுள்ளன. அத்துடன் மகாத்மா தங்கி இருந்த பிர்லா மாளிகை, காந்தி சுடப்பட்டு விழுந்த இடம் மற்றும் காந்தியின் இறுதி ஊர்வலத்தில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. இதனை நூல் என்று கூறுவதை விட பொக்கிஷம் என்றே கூறலாம்.
‘‘உண்மையும், கொல்லாமையும் ராஜ்காட்டில் புதைக்கப்பட்டாலும், தியாகத்தின் வேள்வியில் ஏற்றப்பட்ட தீபம் என்பதால், இந்த மாபெரும் தியாகத்தின் சுடர் உலகம் உள்ளளவும் எரிந்து கொண்டே இருக்கும். இதுவே தியாக தீபம்’’ என்று நூலாசிரியர் கூறியுள்ள வரிகள் நெஞ்சை தொடுவதாக உள்ளன. மகாத்மா காந்தி கொலை பற்றி அறிந்து கொள்ள இந்தப்புத்தகம் ஒரு சிறந்த ஆவணமாகும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மகாத்மா காந்தி கொலை வழக்கு
» மகாத்மா காந்தி கொலை சதி திட்டம் படமாகிறது
» தியாக தீபம்
» மகாத்மா காந்தி
» மகாத்மா காந்தி பொன்மொழிகள்
» மகாத்மா காந்தி கொலை சதி திட்டம் படமாகிறது
» தியாக தீபம்
» மகாத்மா காந்தி
» மகாத்மா காந்தி பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum