தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாசிமக வழிபாடு

Go down

மாசிமக வழிபாடு Empty மாசிமக வழிபாடு

Post  meenu Fri Jan 18, 2013 1:05 pm

தீர்த்த நீராடலுக்கு முக்கியத்துவம் தரும் விழா மாசிமகம் ஆகும். மாசி மாதத்தில் பவுர்ணமியை ஒட்டி வரும் மகம் நட்சத்திரத்தில் இவ்விழா நடக்கும். தீர்த்தங்களுடன் அமைந்த பெரும்பாலான கோவில்களில் இந்நாளில் தெப்பத்திருவிழா நடக்கும். ஆண் குழந்தை வேண்டுபவர்கள், இந்நாளில் முருகனை வேண்டி விரதமிருந்து வழிபடுவர்.

பலன்:

மாசி மகத்தன்று முருகப்பெருமானை வழிபடுவதால் ஆண் குழந்தை பிறக்கும். அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம் கிடைக்கும். 18-ந்தேதி வெள்ளிக்கிழமை இரவு 3.30 மணி வரை மாசி மாதத்து பவுர்ணமி வருகிறது. சந்தர்ப்பம் இருப்பவர்கள் உங்கள் ஊரில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு செல்லுங்கள்.

அன்று இரவு 10 மணி முதல் 12 அல்லது 1 மணி வரையிலும் பவுர்ணமி பூஜை நடைபெறும். சென்னை, கோவை, மதுரை முதலான மாநகரங்களில் இரவு 8 மணி முதல் 10 மணிக்குள் பவுர்ணமி பூஜை நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் அம்மனின் அபிஷேகம் நடைபெறும்போது, நாம் அம்மனின் சன்னதியில் கடைசி ஆளாக நமது மஞ்சள் துண்டினை விரித்து இரு உள்ளங்களையிலும் ருத்ராட்சங்களை வைத்து உள்ளங்கைகளை மடக்கி, ஓம்சிவசிவஓம் ஜபித்து வருவோம்.

அம்மன் சன்னதியில் ஓம்சிவசிவஓம் ஜபிப்பது தவறில்லை, பாவமும் இல்லை, ஏனெனில் இந்த மந்திரத்தில் அனைத்து தெய்வங்களும் சூட்சமாக இருக்கின்றன. எனவே குற்ற உணர்ச்சி வேண்டாம். குறிப்பாக கேது மகாதிசை நடப்பில் இருப்பவர்கள், அசுபதி, மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சிம்ம ராசியில் பிறந்தவர்கள் முடிந்தவரையிலும் அதிக நேரத்திற்கு ஓம்சிவசிவஓம் ஜபிப்பது உங்களின் பாவத்தைப் போக்கும்.

இது செய்ய இயலாதவர்கள், இந்த நாளில் நள்ளிரவு (வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.45 முதல் 1.15 வரை) வீட்டின் மொட்டை மாடியில் ஜபித்து வருவது மிகவும் அதிக நற்பலன்களை தரும். அளவற்ற மன உறுதி உள்ளவர்கள் இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும் ஜபிக்கலாம் என்கிறார் சென்னையின் பிரபல ஜோதிடர் சதீஷ்குமார்.

புனித நீராடல்:::

மாசி மகம் முழுவதுமே புண்ணிய நீராடிட ஏற்ற புனித மாதமாகும். இம் மாதம் தவிர வேறு அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, இரண்டு அயன காலங்கள், வெள்ளிக்கிழமை, கார்த்திகை, சிவராத்திரி, மாசிமகம், மகாமகம் நாட்கள் தான் அவை. மகாமக திருவிழாவை முதலில் துவக்கி வைத்தவர், பிரம்ம தேவன்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மகத்தன்று கும்பகோணம் மாகமகக் குளத்தில் புனித நதிகள்யாவும் வந்து கலப்பதாகவும், அன்று புனித நீராடினால் புண்ணியப் பேறுகள் பலவும் கிட்டும் என்றும் மகாபுராணம் சொல்கிறது. அத்தினமே மகாமகம்.

மாசி மகத்தில் மாசி மகப் பெருவிழா 10 தினங்கள் வரை நடைபெறும். அசுவினி நட்சத்திரம் கூடிய நன்நாளில் கொடி ஏற்றம் செய்து எட்டாவது நாளில் தேரோட்டமும், பத்தாம் நாளான மகம் நட்சத்திரம் கூடிய முழு நிலவு நாளில் பஞ்சமூர்த்திகளும் புறப்பட்டு மகாமக தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி நடக்கும்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மகம் நாளில் குரு, சிம்ம ராசியிலும், சூரியன், கும்ப ராசியிலும் வரும். அந்நாளே மகாமகப் பெருவிழா, ராமர், ராவணனை வதம் செய்வதற்காக சிவனருள் பெற வேண்டி, அகத்திய முனிவரின் ஆலோசனையை நாடினார். அம்முனிவர் கும்பகோணம் வந்த சில காலம் தங்கி இத்தலத்திலுள்ள காசி விஸ்வநாதரை வழிபட்டால் உருத்திராம்சம் பெறலாம் என்றார்.

அதன்படி ராமர் அங்கு வந்து விஸ்சுவேரரை வழிபட்டு, தன் உடலில் உருத்திர அம்சம் ஆரோகணிக்கப் பெற்றார். அதன் காரணமாக இவ்விடமும் காரோணம் எனப் பெயர் பெற்றது. மாசிமகக் குளத்தின் வடகரையில் உள்ளது இக்கோவில்.

கும்பேஸ்வரர் கோவில்:::

காவிரி நதி ஏழு கட்டங்களாக பாய்ந்து வளம் பெருக்கிறது. தலைக்காவிரி, அகன்ற காவிரி, பஞ்சநதம், கும்பகோணம், மத்தியார்ச்சுனம், மயிலாடுதுறை, காவிரிப்பூம்பட்டினம், ஆகியன அவை. இவற்றில் நடு நாயகமாகத் திகழும் தலம் கும்பகோணம்.

ஒரு சமயம், வெள்ளத்தால் உலகம் அழிய இருந்த வேளையில், மீண் டும் உயிர்களை படைப்பதற்கான பீஜம் தாங்கிய அமுத கும்பத்தை பிரம்மா நீரில் மிதக்க விட்டார். அது வெள்ளத்தில் மிதந்து ஒதுங்கிய இடமே கும்பகோணம். மாசி மகத்தன்று கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் பிரதான வழிபாட்டுத் தலமாக திகழ்கிறது.

இங்குள்ள தீர்த்தம் மகாமகத் தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெருமை பெற்ற தலம். கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் 16 படித்துறைகள் உள்ளன. இத்துறைகளில் அனைத்திலும் சிவன் சந்நிதிகள் உள்ளன. இவற்றை க ட்டியவர் கோவிந்த தீட்சிதர். இவர் நாயக்க மன்னர்களின் அவையில் இருந்தவர்.

ஒரு மகாமக நாளில் இக்குளத்தின் வடமேற்கு மூலையில், தன் எடைக்கு எடையாக தங்கத்தை கும்பேஸ்வரருக்கு கொடுத்தார். இப்படி கொடுப்பதற்கு "ஹிரண்ய கர்ப்பம்' என்று பெயர்.

மகாமக தீர்த்தம்::::

கும்பகோணம் மகாமகக் குளம் கிழக்கு மேற்காக நீள் சதுரமாகவும், வடகரையும், தென்கரையும் சிறிது உள்வளைந்தும், கிழக்கில் குறுகியும், மேற்கில் அகன்றும் உள்ளது.

இதை மேலிருந்து பார்த்தால் குடம்போல் காட்சி அளிக்கும். இக்குளத்தில் புனித நீராடினால் அமுதக் குடத்திற்குள்ளேயே நீராடியது போலாகும். பொதுவாக ஒருவரின் பாவம் புண்ணியதீர்த்தம் எதில் நீராடினாலும் நீங்கும் என்பது சாஸ்திரவிதி. புண்ணியத் தலங்களில் பிறந்தவர்கள் செய்த பாவம் கங்கையில் நீராடினால் நீங்கும்.

ஆனால் காசியில் பிறந்தோர் கும்பகோணத்தில் நீராடினால்தான் பாவம் விலகும். கும்பகோணத்தில் பிறந்தவர்கள் எங்கும் செல்லத் தேவையில்லை. மகாமகக் குளத்தில் நீராடினாலேயே விலகிவிடும்.

கர்ண பரம்பரைக் கதை::

முன்பு ஒரு காலத்தில் வருணபகவானைப் பிடித்த பிரகத்தி அவரை கடலுக்குள் ஒளித்து வைத்திருந்தது. வருண பகவான் சிவபெருமாளை வேண்ட, அவரும் அவனைக் காப்பாற்றினார். அவனை விடுவித்த தினம் மாசிமகம் ஆகும்.

அப்போது வருணன் சிவபெருமானை அன்றைய தினத்தில் புண்ணிய தீர்த்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடு பேற்றை அருளும்படி வேண்டினான். அவரும் அவ்வாறு வர மளித்தார். முன்பு ஒரு காலத்தில் பார்வதி சமேதராகக் கலையில் எழுந்தருளி இருந்தார்.

அப்பொழுது உமாதேவியார் அரனாரை அஞ்சலி செய்து எம்பெருமானின் தத்துவ நிலையைச் சாற்றியருளும் படி கேட்டார். அதற்குப் பரமசிவன்

`தேவி, பேரும், குணமும், உருவமும், செயலும் இல்லாத நாம் சக்தியால் அருவுருவங் கொண்டு செயற்படுகின்றாம்'

என்றார். இதனைக் கேட்ட பார்வதி தன்னால் தான் எல்லாம் நடைபெ றுகிறது என்று பெருமைப்பட்டாள். அதனால் சிவபெருமான் தான் இன்றி ஏதும் இயங்காது என்று கூறித் தனித்து நின்றார். இதனால் உலகம் இயக்கமின்றி ஜடமாகியது.

அம்பிகை அரனடியை வணங்கி எம்பெருமானே எல்லாம் நீரே என்று உணரப் பெற்றேன். கருணை புரிந்தருளுக என்று இறைஞ்சினார். அப்பொழுது சிவபெருமான் தான் தக்கனுக்கு கொடுத்த வரத்தை நிறைவேற்ற திருவுளங்கொண்டார். தேவியைப் பார்த்து, உலகம் இயக்கமற்று இருந்த பாவம் உன்னையே சேரும் அப்பாவம் நீங்க நீயே யமுனை நதியில் வலம்புரிச்சங்கு வடிவில் தவஞ்செய்யும்படி கட்டளையிட்டருளினார்.

அரனாரின் கட்டளைப்படி பார்வதி தேவியார் யமுனை நதியில் ஓர் தாமரை மலரில் வலம்புரிச் சங்கு வடிவில் தவஞ்செய்து கொண்டிருந்தார். ஒரு மாசிமக நாளில் தட்சபிரஜாபதி தனது மனைவி வேதவல்லியுடன் யமுனை நதியில் வந்து நீராடினான். அப்பொழுது அங்கு தாமரை மலரில் இருந்த வலம்புரிச் சங்கினைக் கண்டெடுத்தான்.

எடுத்த மாத்திரத்திலே அது பெண்ணுருவாயிற்று, இது சிவனாரின் வரப்படி பார்வதி தேவியாரே வந்தார் என உணர்ந்து வேதவல்லியுடன் கொடுத்து தம் அரண் மனைக்கு எடுத்துச் சென்றான். அம்பிகைக்கு தாட்சயிணி என்று நாமகரணம் சூட்டி அன்புடன் வளர்த்தான் என்று கந்தபுராணம் கூறுகின்றது.

அம்பிகை மாசி மக நட்சத்திரத்தில் அவதரித்ததால் மாசி மகம் பெருமை பெறுகின்றது. இத்தினத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறுவது வழக்கம் என்கிறார் சென்னையின் பிரபல ஜோதிடர் சதீஷ்குமார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum